தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
- ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்
- தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்
- விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
- ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது
- அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது
- அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்
- தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்
- விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்
- இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்
- இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?
இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா?
தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா?
மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.
இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?
தந்தை பெரியார் தீபாவளி என்ற பண்டிகை பற்றி கூறியதன் சிறு தொகுப்பு
நன்றி
தமிழ்ப்பதிவுகள்
12 comments:
வீர வன்னியனே. நரகாசுரன் திராவிடன் என்று சொன்னது யார்? என்ன ஆதாரம்?
- ஒன்னும் தெரியாதவன்....
வீரவன்னியன்,
நரகாசுரன் வன்னிய ஜாதியைச் சார்ந்தவன் என்று ஒரு புராணம் சொல்கிறது.
இந்த பதிவுக்கு நன்றி.
தங்கமணி
இந்த பதிவுக்கு நன்றி.
இந்த பதிவுக்கு நன்றி.
இந்த பதிவுக்கு நன்றி.
இந்த பதிவுக்கு நன்றி.
இந்த பதிவுக்கு நன்றி.
இந்த பதிவுக்கு நன்றி.
it seems that some people are reacently really pissed off, and have stooped to the level of identity theft ;-) btw, if you want to steal my 'blogname' use -/பெயரிலி. instaead of half baked version, '/பெயரிலி'
http://wandererwaves.blogspot.com
Ada... kilma matter! :-)
Navarathri kondadalama??
VeeraVaniyan
First of all the story you have mentioned kind of conflicts with actual purpose of the festival.
Deepa-lights
aavali-garland.
Deepavali is festival of lights.
Its also marks the return of SriRam to Ayodhya after exile. That is the day for Lakshmi puja also. Yes down south celebrated as Krishnas triumph over Naragasura.
But every festival and icon in Hiduism is all symbolic underlying higher truths. Thats what Ithikasams are for.
"What is the significance of lighting a lamp? There is a logical answer to this question. It is through the light that the beauty of this world is revealed or experienced. Most civilizations of the world recognize the importance of light as a gift of God. It has always been a symbol of whatever is positive in our world of experience.
To Hindus, darkness represents ignorance, and light is a metaphor for knowledge. Therefore, lighting a lamp symbolizes the destruction, through knowledge, of all negative forces- wickedness, violence, lust, anger, envy, greed, bigotry, fear, injustice, oppression and suffering, etc"
Not celebrating over a race issue as you make out.
BTW most of Indologist and historians have backed away from AIT theory including famous historian Romila Thapar.
This theory was invented by Britishers along German Nationalist Max Mueller to justify their occupation.
Check out the BBC link
http://www.bbc.co.uk/religion/religions/hinduism/history/history5.shtml
Sorry If I have made a long comment in your blog, you can delete it if you dont want it.
Post a Comment