Saturday, October 15, 2005

தேர்தல் ஜல்சா - 1

சென்னை அக் 15 - தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை சரியாக கணிப்பதில் எப்பொழுதுமே முன்னிலையில் இருப்பது தினமலர் பத்திரிக்கை தான். தினமலரின் கணிப்பு எப்பொழுதுமே மிகச் சரியாக இருக்கும் என்பதை நாம் கடந்த தேர்தலில் பார்த்திருக்கிறோம்.

கடந்த தேர்தலில் பாமகவின் ஓட்டு வங்கி, தீரன், பு.தா. அருள்மொழி போன்ற மாபெரும் தலைவர்களால் ரஜினிக்கு ஆதரவாக மாறியதை சரியாக கணித்த தினமலர் மறுபடியும் தன் கணிப்பை ஆரம்பித்திருப்பதை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் தமிழகத்தின் "கிறுக்கு ஸ்டார்" பின் தமிழக இளைஞர்கள் அணிவகுத்து பாமகவை 6 இடங்களிலும் தோற்கடிக்கத்ததை சரியாக கணித்த தினமலர், இம் முறை அடுத்த எம்.ஜி.ஆராக விஜயகாந்த் உருவாகப் போவதாக கணித்துள்ளது

பாமக, திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழகத்தில் இருக்கும் பிறக் கட்சிகள், சாதி சங்கங்கள் என அனைத்திலும் இருக்கும் இளைஞர்கள், முதியவர்கள், தாய்க்குலங்கள், மழலைகள் என அனைத்து பிரிவினரும் கடந்த தேர்தலில் "கிறுக்கு ஸ்டார்" பின் அணிவகுத்ததைப் போல இம்முறை விஜயகாந்தின் கட்சியில் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருப்பதாக ஆருடம் கூறி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை தினமலர் ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி வாய்ஸ் கொடுத்ததால் ராமதாசின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றும், பாமக காலியாகி விடும் என்றும் லட்சக்கணக்கான தமிழ் வலைப்பதிவு சமூகத்தில் கடந்த தேர்தலின் பொழுது மிகச் சரியாக முழுக்கமிட்ட வலைப்பதிவு உலகின் "டம்மி ஸ்டார்" ரஜினி ராக்கி அவர்கள், இம் முறை விஜயகாந்த் வருகையால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கூடாரம் காலியாகி விடும் என்று கணித்துள்ளார். அவரது இந்தக் கணிப்பு வலைப்பதிவு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வலைப்பதிவு உலகின் ராஜரிஷி கத்ரி அவர்களும் பாமக மண்ணைக் கவ்வ வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்திருப்பதால், வலைப்பதிவு உலகில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

இதற்கிடையே ஒரு முக்கிய திருப்பமாக வலைப்பதிவு உலகின் "...குறி" ஸ்பெஷலிஸ்ட பாட்சாவசந்த் அவர்கள், திருமாவளவனுக்கு எதிராக கோஷ்டி தாவியுள்ளார். இந்த நிகழ்ச்சி வலைப்பதிவு சமூகத்தை பிளவுபடுத்தும் என்றும், எதிர் கோஷ்டிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்றும் ஆட்டோவுக்கும், ஆசிடுக்கும் பயந்து கொண்டு "மாஸ்க்" அணிந்தும் பயம் தெளியாமல், சத்தியமங்கலம் காடுகளில் பதுங்கியிருக்கும் வாய்மூடி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கருத்துகளை மிகக் கடுமையாக மறுத்துள்ள வலைப்பதிவு உலகின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் மழலி அவர்கள் பண்ருட்டியில் இருந்து சில புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்துள்ளார். இது வலைப்பதிவில் உள்ள எதிர் கோஷ்டிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன பதில் தேடலாம் என்பது குறித்து அவர்கள் "பரங்கிமலைக்கு" சென்று தவம் இருந்து ஆரயப் போவதாக கடைசி செய்திகள் கூறுகின்றன.

தமிழ்மணத்தில் இருந்து "வீரவன்னியன் -
வெற்றி எமதே" பகுதிக்காக
மாம்பழத்து வண்டு

6 comments:

Anonymous said...

:)
Where is "parangi Malai ?"

வீரவன்னியன் said...

Where is "parangi Malai ?"

நம்ம போயஸ் தோட்டத்துக்கு பக்கத்துல தாங்க இருக்கு

நம்ம "கிறுக்கு ஸ்டார்" சொன்னாருல்ல அதிர்ஷ்டலட்சுமி, தைரியலட்சுமி அப்படின்னு, அவுங்க வூட்டுல இருந்து நேர கிளம்பினா, அப்படியே...போய்க்கினே இருந்தா...
ஒரு சிகரெட்டை சும்மா சுத்தி சுத்தி போடறதுக்குள்ள வந்துடும்ங்க...

அங்க ஒக்காந்து ஒரு பெக் அடிச்சிட்டு மப்பூல இருந்துட்டு, அப்பால, பேட்டி குடுக்குறப்ப, எப்படி தவம் இருக்கறதுன்னு கொடுக்கலாம்க

குழலி / Kuzhali said...

சும்மாவே நம்மள சுத்தி சுத்தி அடிக்கிறாங்க, நீங்க வேற ஏற்றி விடுகின்றீர்...

தொடர்ந்து இரண்டு பதிவுகள் போட்டால் தமிழ்மணம் சேகரிக்கும் போது கடைசி பதிவை மட்டும் தான் காண்பிக்கும் எனவே தொடர்ந்து இரண்டு பதிவுகள் போடும் போது தமிழ்மணம் முதல் பதிவை சேகரித்து பின் வேறு யாருடைய பதிவையாது சேகரித்து முடித்தவுடன் இரண்டாவது பதிவை போடவும், இல்லையென்றால் முதல் பதிவு காணாமல் போய் விடும்.

நன்றி

குழலி / Kuzhali said...

தேர்தல் நெருக்கத்தில் எனக்கு தெரிந்த தொகுதிகளை பற்றி நடுநிலையான நிலவரங்களோடு வருகின்றேன்... ஹி ஹி நமக்கு இந்த தேர்தல் நிலவரம் ரொம்ப பிடித்தமான விடயம்.

நன்றி

வீரவன்னியன் said...

தமிழ்மணம் டெக்னிக்கல் அம்சங்களை விளக்கியதற்கு நன்றி குழலி

ஜெ. ராம்கி said...

//கருத்துகளை மிகக் கடுமையாக மறுத்துள்ள வலைப்பதிவு உலகின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் மழலி அவர்கள் பண்ருட்டியில் இருந்து சில புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்துள்ளார். இது வலைப்பதிவில் உள்ள எதிர் கோஷ்டிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

:)