Thursday, October 13, 2005

பார்ப்பான் என்ற சொல்லை அழிப்போம்

மகாகவி பாரதியார் "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியை துரையென்ற காலமும் போச்சே"

என்று ஆனந்தமாக சுதந்திரப் பள்ளு பாடினார். தந்தை பெரியார் காலத்தில் தொடங்கி இன்றளவும் பார்ப்பான், பார்ப்பனீயம் போன்ற

சொற்கள் வழக்கில் இருந்து வருகிறது. இது சாதியை குறிக்கும் சொல்லாக இல்லாமல், ஒரு மேல் தட்டு இனத்தின் ஆதிக்க எண்ணத்தை

குறிக்கும் சொல்லாக, கீழ்தட்டு மக்களை மதம், சாதி போன்ற பல பிரச்சனையின் காரணமாக ஒடுக்கி வைக்கும் ஒரு போக்கின்

அடையாளமாக நினைக்கப்படுகிறது. அத்தகையோரை எதிர்க்கும் எண்ணத்தின் அடையாளமாக தான் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது எழுந்தது.

சாதிகள் ஓழிய வேண்டும் என்று பாடிய முண்டாசு கவிஞன் ஏன் பார்ப்பான் ஓழிய வேண்டும் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

ஆனந்தப் பள்ளு தவிர வேறு சில இடங்களிலும் பாரதி இந்த வார்த்தையை பிரயோகித்து இருக்கிறான்.

நான், பாரதியை இங்கு எந்த சாதியுடன் இணைக்க வில்லை என்பதை ஆழமாக, பல முறை வலியுறுத்தி சொல்லி விட நினைக்கிறேன்.

பாரதி சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்க் கவிஞன். அவனை ஆழமாக போற்றுகிறவர்களின் நானும் ஒருவன்.

தான் எந்த இனத்தில் இருந்து வருகிறானோ, அதே இனத்தை ஏன் பாரதி கோபமாக இழித்துரைக்க வேண்டும். சாதிகள் இல்லை என்று பாடிய பாரதி ஏன் பார்ப்பானை மட்டும் இகழ்ந்துரைக்க வேண்டும்.

அந்தளவுக்கு அந்த சமுதாயம் மேல் அவன் கடுங்கோபம் கொண்டான். அதற்கு காரணம் மொத்த சாதி அல்ல. ஆதிக்க பார்ப்பன மன்ப்பான்மை மற்றும் அந்த ஆதிக்க மனதால் பிற சாதிகளை அடக்கி ஓடுக்க வேண்டும் என்று நினைக்கும் அந்த எண்ணத்தை தான் பாரதி, பெரியார் தொடங்கி டாக்டர் ஐயா வரை பின்பற்றினார்கள்

என்னுடைய பதிவுகளில் கூட பார்ப்பான் என்று நான் கூறுவது சாதீயம் பேசுவதாகவும், ஒரு இனத்தை திட்டுவதாகவும் எனக்கு வந்த "லட்சக்கணக்கான" மின்னஞல்களில் பல பிராமண நண்பர்கள் ( டோண்டு மாமா இந்த வார நட்சத்திரமாக இருப்பதால் அவரை

குஷிப்படுத்த மற்றொரு முறை "பிராமண நண்பன்" இந்த வார்த்தையை பிரயோகிக்கிறேன் ) குறைப்பட்டுக்கொண்டார்கள். அவர்களின்

குறை தீர்ப்பதை ஒரு தார்மீக கடமையாக கொண்டு, இருந்த நாட்டை விட்டு தாய் மண்ணுக்கு வந்துள்ள இந்த நேரத்திலும் மினி பஸ்

எல்லாம் பிடித்து, சைபர் கபேவில் இந்த பதிவை சுரதா கொண்டு துன்பப்பட்டு அடித்து என் மனசாட்சியை இங்கு பறைசாற்றி விடுவது

என்று முடிவு செய்துள்ளேன். அப்படி செய்யா விட்டால் இந்த பதிவை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதையும் என்

சார்ப்பாக நான் வலியுறுத்த நினைக்கிறேன் (சரி...பெரிய பீட்டரு தான்..யாரோ ஒருவருடைய சாயல் வரனும்னு இவ்வளவு கஷ்டப்பட்டு

நீட்டி முழக்க வேண்டி இருக்கு)

பாரதி, பெரியார் என்று பெரிய மனிதர்களால் தொடங்கப் பட்ட பிராமண எதிர்ப்பு இன்று சுருதி குறைந்து விட்டது. இன்றைக்கு பிராமண

எதிர்ப்பு தேவையா என்பதும் ஒரு கேள்வி ?

பிராமண எதிர்ப்பு, பிராமணர் அல்லாத பிற சமூகத்தை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார போன்ற நிலைகளில் உயர்த்த எழுந்த

கோஷம். அந்த கோஷம் பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டது. இன்றைக்கு எல்லா நிலைகளிலும் பிராமணர்

அல்லாத சமுதாயம் பிராமணர்களை மிஞ்சி கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் அளவுக்கு முன்னேற வேண்டும் என்ற நிலை மாறி,

அவர்களுடன் போட்டியிட வேண்டும் என்ற நிலையும் மாறி, இன்று ஒரு பெரிய சமன்பாடு நிலவுகிறது. இத்தகைய சூழலில் பிராமண

எதிர்ப்பு தேவை தானா ?

ஏன் வலைப்பதிவுகளில் பிரமணர், பிரமணர் அல்லாதோர் பிரச்சனை நீடிக்க வேண்டும் ?

எனவே பார்ப்பான் என்ற சொல்லை அழித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன். இதனை வலைப்பதிவுகளில் அறிவித்து, என்னுடைய பதிவின் பெயரையும் மாற்றி வேறு ஒரு புதிய தளத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

இந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாட, அம்மா ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயிட்டு வாடா, பல வருஷம் கழிச்சி ஊருக்கு வந்திருக்க என்று

சொல்ல நானும் கோயிலுக்கு சென்று வழிபட்டு, பார்ப்பான் என்ற சொல்லை நான் நீக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானத்தை கடவுள் சந்நிதியில் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

இந்த தீர்மானத்துடன் கோயிலுக்கு சென்றால்...அங்கு ஒரு பெரிய பலகை, கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை ? நான் நுழைய அனுமதி இல்லை என்றால் வேறு யார் நுழையலாம் ? பார்ப்பன எதிர்ப்புக்கு இன்னமும் அவசியம் இருக்கிறது என்பது அப்பொழுது தான் எனக்கு உரைத்தது ?

ஸ்ரீரங்கம் ரங்கநாதனிடம் கோபித்துக் கொண்டு வேகமாக வெளிவருகிறேன், மற்றொரு பலகை - இங்கு தமிழிலும் அர்ச்சனை

செய்யப்படும் ? தமிழ்நாட்டில் தமிழிலும் என்று ஒரு அவமதிப்பா என்ற கோபமும் என்னை வெறிகொள்ள வைத்தது.

பார்ப்பானை கருவறையில் இருந்து நீக்கும் வரை பார்ப்பான் என்ற வார்த்தையும் தொடர தான் வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்

7 comments:

டிபிஆர்.ஜோசப் said...

ஒரு காலத்தில் (சுமார் முப்பது வருடங்களுக்கு முன்) ஹிக்கிம்பாதம்ஸ் (இன்றும் பெயர் பெற்ற புத்தகக் கடை) அலுவலகத்தில் (Back Office) வேலை செய்துக் கொண்டிருந்தேன்.

அலுவலகம் முழுவதும் (பேக்கர்ஸ், ஆஃபீஸ் பாய் வேலைகளுக்குத் தவிர)நீங்கள் கூறும் இனத்தவர்தான் (நான் மீண்டும் பார்ப்பனர் என்று கூறவேண்டாமே என்று பார்த்தேன்). நான் ஒரு Apprentice எழுத்தராக ஆறுமாத காலம் பணியாற்றினேன்.

அப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்திருந்ததால் (11+1+3 படிப்பு முறை - அவ்வளவாக விவரம் போதாது (வயது 22 மட்டுமே).

இருப்பினும் அந்த ஆறுமாத கால நெருங்கிய பழக்கம் இன்று அவ்வினத்தாரைக் காணும்போதெல்லாம் ஒரு இனம் புரியாத வெறுப்பு ஏற்படுகிறது.

எனக்கும் அவ்வினத்தாரில் நண்பர்களுண்டு. ஆயினும் இரு பார்ப்பனர்கள் சேர்ந்துக்கொண்டால் பிற இனத்தவரைக் குறைத்து மதிப்பிடும் குணம் இன்றுவரை இவர்களிடத்தில் நிறைந்திருக்கிறதென்பதை பலமுறை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

"பள்ளு என்றால் என்ன தெரியுமா? மேன்மக்களாகிய பார்ப்பான்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட பள்ளர்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்போம் என்பதாகும். இவ்வாறு நாங்கள் எங்கள் சென்னைக் கூட்டத்தில் விளக்கம் சொல்வோம்."
என்று கூறும் இவ்வார நட்சத்திரத்தை என்னவென்று கூறுவதென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

அவருடைய கருத்து (Are you really serious about what you wrote Mr.Dondu?) விமர்சனத்துக்குக் கூட தகுதியில்லாதது என்று எண்ணி ஒதுக்கித் தள்ளுகிறேன்.

குழலி / Kuzhali said...

//அவருடைய கருத்து (Are you really serious about what you wrote Mr.Dondu?) விமர்சனத்துக்குக் கூட தகுதியில்லாதது என்று எண்ணி ஒதுக்கித் தள்ளுகிறேன்.
//
ஜோசப், டோண்டு பெயரில் பின்னூட்டியது போலி டோண்டு, இங்கே சில காலமாக இருப்பவர்களால் அதை எளிதாக புரிந்து கொள்ளமுடியும், புதியவர்களுக்கு சற்று சிரமன் தான், பொதுவாக டோண்டு அவர்களின் பின்னூட்டங்களில் அவரின் படமும் சேர்ந்து வரும், சில சமயங்களில் படம் வந்தாலும் பிளாக்கர் கணக்கை பார்த்தால் உண்மை புரியும்.

நன்றி

dondu(#11168674346665545885) said...

"கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை ? நான் நுழைய அனுமதி இல்லை என்றால் வேறு யார் நுழையலாம் ?"
கருவறைக்குள் அர்ச்சகர் மட்டுமே செல்ல முடியும். மற்ற யாரும் பார்ப்பனர் உள்பட செல்ல முடியாது.

குழலி நன்றி. மேலே வந்த பின்னூட்டம் என்னுடையதல்ல.
ஜோசஃப் அவர்களே, என்னுடைய இப்பதிவைப் பாருங்கள். உங்களுக்கு விளங்கும்.
பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் குமார் said...

மிக ஆழ்ந்து யோசிக்கையில் ஜாதி தவறான விஷயம் என எனக்குப் படவில்லை. அதை சரிவர உபயோகிக்க நமக்குத்தெரியவில்லை என்றே தோன்றுகிறது. எல்லா இடங்களிலும் ஒரு குழு மனப்பாண்மையுடன் வாழப்பழகிவிட்டவன் மனிதன். ஒரு சிறு தொழிற்சாலையில் கூட, சில சொற்ப எண்ணிக்கையிலான தொழிலாலிகள் சேர்ந்து தங்கள் நலனுக்காக யூனியன் அமைத்துக்கொள்வதை நாம் ஏற்றுக்கொள்ளத்தானே செய்கிறோம்.

தேசிய உணர்வை உயிராய் மதிக்கிற நாம், ஜாதியை வெறுப்பது எப்போதுமே எனக்கு மிக விசித்திரமாய்தானிருக்கிறது. அவை கொண்ட உறுப்பிணர்களின் எண்ணிக்கை தவிர வேறென்ன வித்தியாசம் இரண்டுக்கும்? இரண்டு ஜாதிகள் வெட்டிக்கொண்டு சாகும்போது "அவனுக்குள்ளேயும் சிவப்பு ரத்தம் தானே ஓடுது.." என்று உபதேசம் செய்யும் நாம், கார்கில் போரின் போது நமது வீரர்களுக்கு நிதி உதவி செய்தோம். அப்போது பாக்கிஸ்தானியர்கள் உடம்பில் பச்சை இரத்தம் ஓடியதா என்ன? அவனும் நம்மைப்போன்ற அனைத்து உணர்வுகளையும் கொண்ட மனிதன் தானே. என்னைப்பொருத்தவரையில், தேசியம் சரி என்றால் ஜாதியும் சரிதான். அதை நாம் சரிவர பயன்படுத்துவதில்லை. அவ்வளவுதான்.

இந்த நோக்கில், சில தவறான அணுகுமுறைகளை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், பார்ப்பனர்களைப்போல் ஜாதியை சரியாய் பயன்படுத்திக்கொண்டவர்கள் யாருமில்லை. நமக்கெல்லாம் அந்த திறமை இல்லை என்பதே நம்மில் பலருக்கு இருக்கும் எரிச்சல். ஒரு பார்பனன் இன்னொரு பார்ப்பனனுக்கு உதவும் அளவிற்கு வேறெந்த ஜாதிக்காரனும் தன் ஜாதிக்காரனுக்கு உதவுவதில்லை என்பது நம்மில் பலரின் புலம்பல் என்பது நிஜம் தானே.

பார்ப்பனர்களிடத்தில் நாம் கற்க வேண்டிய நல்ல விஷயங்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, கலைகள் கற்க தங்கள் பிள்ளைகளை(பெண் பிள்ளைகளை கூட) அவர்கள் உற்சாகப்படுத்தும் விதம் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் நாம் 8-ம் வகுப்புக்கு மேல் பெண்களை வீட்டில் தானே அடைத்திருக்கிறோம்.

மற்றவர்களின் வளர்ச்சியை தடுப்பதை விட முக்கியமான வேலைகள் நமக்கு இருக்கின்றான. முடிந்தால் அவர்களிடத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு நம்மை நாம் வளர்த்துக்கொள்ள நமக்குள் உதவிக்கொள்வோம்.

டிபிஆர்.ஜோசப் said...

//ஜோசப், டோண்டு பெயரில் பின்னூட்டியது போலி டோண்டு, இங்கே சில காலமாக இருப்பவர்களால் அதை எளிதாக புரிந்து கொள்ளமுடியும், புதியவர்களுக்கு சற்று சிரமன் தான், பொதுவாக டோண்டு அவர்களின் பின்னூட்டங்களில் அவரின் படமும் சேர்ந்து வரும், சில சமயங்களில் படம் வந்தாலும் பிளாக்கர் கணக்கை பார்த்தால் உண்மை புரியும்.//


நன்றி குழலி!

மன்னித்துக்கொள்ளுங்கள் டோன்டு.


போலிகள் நிறைந்த உலகம் இது என்பது தெரிந்ததுதான் . தமிழ்மணத்திலுமா?

Anonymous said...

paarpana veuppu pazaya kiraamathu kadhaigalile kuda undu.

neengal saadhiyai izuppadhal ungaludaya pala padhivugalil ulla sariyaga sollapatta vishayangal kuda edupadamal pogiradhu. idhu kadantha 3 padhivugalai paarthapodhu naan ninaithadhu.
adhe vishayathai veru peyaril ezudhi parungal. ungaluku adharavu
varum.

G.Ragavan said...

வீர வன்னியன்.

பாரதியின் பெருமை பேசுகின்ற நீங்கள் அவரது கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதும் பாரதி சொன்னதே.

தவறு செய்கின்றவர்கள் எங்கும் உண்டு. குற்றத்தைச் சொல்லும் பொழுது கூட நாகரீகமாகச் சொல்ல வேண்டும். அதுதான் முறை. அதுதான் தமிழ்ப் பண்பாடு. இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். விரும்புகிறேன்.

இல்லையென்றால் பள்ளன் பறையன் என்று கேவலமாகப் பேசுகின்றவர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

அன்புடன்,
கோ.இராகவன்