Saturday, October 15, 2005

காமெடி மலர் - 1

தேர்தல் என்றாலே எனக்கு ஒரே கும்மாளம் தான். மற்ற நேரங்களில் தினமலரை "டாய்லெட்" டிஷ்யுவாக மட்டுமே பயன்படுத்தும் நான், தேர்தல் வந்தால் "டாய்லெட்டில்" படித்து சிரித்து விட்டு பின் "டாய்லெட்" டிஷ்யுவாக பயன்படுத்துவேன். அவ்வாறு படித்து, சிரித்த சில வரிகளை வழங்குவது தான் "காமெடி மலர்" பகுதியின் முக்கிய நோக்கம்.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற நல்லெண்ணம் காரணமாக இந்தப் பகுதிகளை வழங்குவதில் மிக்க மகிஷ்ச்சி அடைகிறோம்

ஸ்மெலிவரும் இடங்களில் எல்லாம் நம்ம தொலைக்காட்சி காமெடி ஷோவில் சிலர் பிண்ணனியில் சிரிப்பார்களே, அது போல கற்பனை செய்து கொண்டே படித்தால், இன்னும் சுவாரசியமாக இருக்கும்

----------------

""கேப்டன் அறிவிச்சதும் தான் அறிவாலயமே உஷாராச்சாம்ங்க......''

""தமிழ்நாட்டு அரசியல்ல தனி ரூட்டுல போய்கிட்டு இருக்காரு கேப்டன்... அவர பாலோ பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு அறிவாலயம் வந்துருச்சாமா வே...'' என்று சந்தேகத்தோடு கேட்டார் அண்ணாச்சி.

""ஆமாங்க... பூகம்ப நிவாரண நிதிக்கு முதல் கட்சியா நிதியுதவி

அறிவிச்சது கேப்டன் கட்சி தானாம்... ஐந்து லட்ச ரூபாய் தரப் போறதா விஜயகாந்த் அறிவிச்ச செய்தி தெரிஞ்சி தான் அறிவாலயத்துல அவசரமா "மினி மீட்டிங்'
போட்டு முடிவெடுத்து நைட்டோட நைட்டா 20 லட்ச ரூபாய் கொடுக்கப் போறதா அறிவிச்சாங்களாம்... அதை தொடர்ந்து அடுத்த நாளு வைகோவும் நிதியுதவி அறிவிப்புக்கு ஆளானாராம்ங்க... சினிமாவுல இருக்கும் போதும் இந்த மாதிரி விஷயங்கள்ல முதல் ஆளா இருப்பாராம் கேப்டன்... அரசியலுக்கு வந்த பிறகும் அவரு ஸ்டைல் மாறலீங்களாம்...'' என்று சொல்லி முடித்தார் அந்தோணிசாமி.

3 comments:

Anonymous said...

இருந்தாலும் தினமலருக்கு நீங்க குடுக்கும் மதிப்பு ரொம்பவே அதிகம்... :-))

Pot"tea" kadai said...

செம காமெடிக் கந்தல்!!! கெ.. கெ.. கெ...இப்பிடியெல்லாம் எழுதினா தானே அவா எல்லாம் நியூஸ் பேப்பரை வாங்குவா...ஆனா நம்ம பொட்டீக்கடை பெஞ்ச்சிலே ஆருமே பேச மாட்றாங்களே! :)

வீரவன்னியன் said...

/*

இருந்தாலும் தினமலருக்கு நீங்க குடுக்கும் மதிப்பு ரொம்பவே அதிகம்

*/

ஆமாங்க, தினமலரை டாய்லெட் டிஷ்யுவாக கூட பயன்படுத்தக் கூடாது தான். அதுக்கும் தரக்குறைவா தான் அது இருக்கு

இனிமே இந்து பத்திரிக்கையை அதுக்கு உபயோகப்படுத்தலாம்