Monday, October 31, 2005

தீபாவாளி - சீ என்று விடுவீரே

‘ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி” என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தாம் எழுதிய “தமிழர் மதம்” என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர்-

“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்’ (வேளாளர் நாகரிகம் - பக்கம் 60)

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று” என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

‘தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை’ எனப்பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாம் எழுதிய ”மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு” என்னும் நூலில் மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார்.

-----------
தனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கின்ற ஒருவரை கடவுள் என்று அழைக்க முடியுமா?

ஆனால் புராணக் கதைகள் அப்படித்தான் ‘பரம்பொருளை’ சித்தரித்திருக்கிறார்கள். எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும்;, தேவர்களை மீட்க கடவுள் அவதாரம்செய்ததாகவும் சொல்கின்றன.

உண்மையில் இவையெல்லாம் அன்றைய ஆரிய திராவிட இனங்களுக்கு இடையிலான போரையே குறிக்கும்.

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, பன்றி, முயல், உடும்பு இவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் ‘அவிர்ப்பாகம்’ என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப் பட்டார்கள். குதிரை, மாடு, ஆடு, முயல், உடும்பு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் பரசுராமன் அவதாரம் என்பது முழுக்க முழுக்க அசுரர்களை கொன்றொழித்த கதைதான். பூலோகத்தில் அசுரர்கள் செய்துவரும் கொடுமைகளினால் பூமாதேவி பாரம் தாங்க முடியாமல் தனது கணவன் விஷ்ணுவிடம் முறையிட்டாள். உடனே ‘பூமியில் அவதாரம் செய்து பூமிபாரத்தைத் தீர்த்து வைப்பேன்’ என்று கூறி தக்னி முனிவருக்கும் அவரது பத்தினி ரேணுகைக்கும் பரசுராமனாகப் பிறக்கிறார் விட்ணு. தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய ‘வீரன்” என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர் களையும் (அசுரர்களை) ஒரு காலத்திலும் தலை தூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமி பாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், சகோதரனைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்?
இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்?

-------------------
மானம் உணரும் நாள்!
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
இப்பெயரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னுகின்றனர் என்பது பொய்யா?
இவைகளை நாம் எண்ண வேண்டும்.
எண்ணாதெதையும் நண்ணுவதென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொளவேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும்பாகாது!
‘உனக்கெது தெரியும், உள்ள நாளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்றுகேட்பவனை, ‘ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று
கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணருநாள் இந்நாள்.
தீவாவளியும் மானத்துக்குத்
தீபாவாளி ஆயின் சீ என்று விடுவீரே!

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தீபாவளி ???

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

  • ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்
  • தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்
  • விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
  • ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது
  • அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது
  • அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்
  • தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்
  • விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்
  • இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்
  • இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?


இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.

இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?

தந்தை பெரியார் தீபாவளி என்ற பண்டிகை பற்றி கூறியதன் சிறு தொகுப்பு



நன்றி


Sunday, October 30, 2005

குண்டுவெடிப்புகள் - தீர்வு என்ன ?

தில்லி குண்டுவெடிப்புக்கு பிறகு வழக்கம் போல் அரசியல்வாதிகள் முதல் ஊடகங்கள், வலைப்பதிவாளர்கள் வரை அனைவரும் தீவிரவாதிகளை முறியடிப்போம், தீவிரவாதிகளை கொல்வோம் என்று முழுக்கமிட்டுக் கொண்டிருக்கிறோம். இது போல தான் கடந்த இருபது ஆண்டுகளாக நாம் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். பிரச்சனையும் தீவிரமாகி கொண்டே தான் இருக்கிறது.

எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாக முடியாது. அது தீவிரவாதிகளின் வன்முறைகளாகட்டும் அல்லது அரசு இயந்திரங்கள் செய்யும் வன்முறையாகட்டும் இரண்டுமே வன்முறை தான். ஆனால் அரசு இயந்திரங்கள் அதனை செய்தால் நாட்டை காக்கும் பொருட்டு செய்யப்படும் சேவைகளாக சித்தரிக்கப்படுகின்றன.

அடக்குமுறைகள் அதிகரிக்கும் பொழுது அடங்க மறுக்காமல் போராடும் நிலை அனைத்து சமுதாயங்களிலும் அவ்வப்பொழுது தோன்றி கொண்டே தான் இருக்கிறது. அடங்க மறுக்கும் போக்கு இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது. அன்றைய பிரஞ்ச் புரட்சி தொடங்கி இன்று ஈழத்தில் நடக்கும் சுதந்திர போராட்டம் வரை அடங்கமறுக்காமல் போராடும் குணம் ஒரு போதும் குறையப்போவதில்லை.

ஒரு இனம் அடங்கமறுக்காமல் போராட தலைப்படும் பொழுது இந்த போராட்டத்தை அழித்து ஒழிக்க ஆதிக்க சக்திகள் தங்களுடைய ஆயுதங்கள், தளவாடங்கள் மூலம் முயலுகின்றன. தங்களுடைய ஆயுதங்களால் அந்தப் போராட்டத்தை அழிக்க முடியாத பொழுது அந்தப் போரட்டம் பற்றிய அவதூறுகளையும், பொய்ச் செய்திகளையும். இட்டுக்கட்டிய கதைகளையும் பரப்ப நினைக்கின்றன.

ஒருவன் எப்படி தீவிவாதியாகிறான் ? இது பற்றி நாம் ஆராய்வதே இல்லை. அவனுக்கு மனைவியோ, பிள்ளைகளோ, பெற்றோர்களோ இல்லையா ? அவன் பிறக்கும் பொழுதே துப்பாக்கிகளுடனும், குண்டுகளுடனும் தான் பிறக்கின்றானா ?

ஒவ்வொரு தீவிரவாதியும் அரசாங்கத்தால் உருவாக்கப்படுகிறான். பஞ்சாப்பிலும் சரி, அசாம், காஷ்மீரிலும் சரி தீவிரவாதிகள் அரசால் உருவாக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் பாக்கிஸ்தான் மீது பழி போட்டு தப்பிக்க கூடாது.

நம் வீட்டில் நிலைமை சுமூகமாக இருந்தால் பாக்கிஸ்தான் இங்கு வாலாட்ட முடியுமா ?

காஷ்மீரிலும், அசாமிலும் நடப்பது தமிழகத்திலோ, கேரளாவிலோ, கர்நாடகத்திலோ ஏன் நடப்பதில்லை.

சென்னையும், பெங்களூர் இளைஞர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த கல்வி, வேலைவாய்ப்பு வசதி ஏன் ஸ்ரீநகரிலும், கொளகாத்தியிலும் ஏற்படுத்தப்படவில்லை. அந்த இளைஞர்களை ஏன் சந்தேக கண்ணோடு பார்க்கப்பட வேண்டும்.

அங்குள்ள பெண்கள் என்ன இராணுவத்திற்கு தீனி போடும் போகப் பொருட்களா ?

இராணுவத்தின் சந்தேகமும், பாலியில் அத்துமீறலும் இன்னும் பல தீவிரவாதிகளை தான் உருவாக்கி கொண்டிருக்கும். நல்ல கல்விச் சாலைகளையும், வேலைவாய்ப்புகளையும் அந்த இளைஞர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தால் ஆயுதங்களும், குண்டுவெடிப்புகளும் காணாமல் போய் விடும்.

துப்பாக்கி எடுக்கும் இராணுவம், சிறிது அன்பை தனது சொந்த பிரஜைகள் மீது செலுத்தினால் தீவிரவாதிகளுக்கு உதவும் மக்கள், நமக்கு உதவி செய்வார்கள்.

துப்பாக்கி தூக்கும் இளைஞர்களை அழைத்துப் பேசி அவன் பிரச்சனைகளை சரி செய்தால், பாக்கிஸ்தானுக்கு எப்படி இங்கு தீவிரவாதம் வளர்க்க ஆள் கிடைக்கும்.

அவன் கேட்பது சுய உரிமை என்றால் கொடுக்கலாமே.. இந்தியாவிற்குள் சுய உரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. 1947க்கு முன்பு வரை இந்தியாவே பல தேசங்களாக சிதறி தானே இருந்தது. இந்தியா என்ற நாடே பிரிட்டிஷ்காரன் ஏற்படுத்தி கொடுத்து தான்.

ஒவ்வொரு தேசிய இனத்தின் சுதந்திரமும், தன்னுரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

முதலில் அரசாங்கம் மனித நேயத்தை வளர்க்க வேண்டும்.

இத்தகைய முயற்சிகளை எடுக்காமல் தீவிரவாதத்தை நசுக்குவேன், அழிப்பேன் என்றால்.

I am sorry. It's never going to end


Saturday, October 29, 2005

நியூயார்க், மேட்ரிட், லண்டன், தில்லி

திரு.பத்ரி லண்டன் குண்டுவெடிப்பு பற்றிய பதிவில் இவ்வாறு கூறி இருந்தார்

இது நிற்காது.
எல்லா பயங்கரவாதங்களுக்கும் ஊற்றுக்கண் அரசுகள் தன் நாட்டினர் மீதும் பிற நாட்டினர் மீதும் நிகழ்த்தும் வன்முறைகள் என்பது என் கருத்து

தொழில்நுட்பம் பரவப்பரவ, பாதிக்கப்பட்டவர்கள் - நாடுகளோ, தனி மனிதர்களோ - தாங்களும் சக்திமிக்க நாடுகள் மீது தாக்குதலைத் தொடுக்க முடியும் என்று காண்பித்து வருகின்றனர்

இன்று லண்டனில் நூறு சாவுகள். இவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளா? பிளேர் போன்ற அரசியல்வாதிகளைத் தடுக்காத, நியாயமற்ற ஈராக் போரைத் தடுக்காத குற்றம் பிரிட்டனில் ஓட்டுப்போடும் வயதில் உள்ள அத்தனை பேர்களுக்கும் உண்டு. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் ஒவ்வொரு முறையும் ஒரு தீவிரவாதி உருவாக்கப்படும்போது அதற்கு நானும் இதைப்படிக்கும் நீங்களும் காரணம்

----------------------------

இது எவ்வளவு அபத்தமான கருத்து என்பது நமக்கு இப்பொழுது தான் புரிகிறது. எவன் வீட்டிலோ எழவு விழுந்தால் நமக்கு என்ன, இறந்தவர்கள் அப்பாவிகள் அல்ல என்று எழுதுவது அப்பொழுது முற்போக்கு எழுத்தாக தெரிந்தது. இப்பொழுது அபத்தமாக தெரிகிறது. நம் நாட்டில் எழுவு விழுந்தால் தான் உயிரின் அருமை புரிகிறது.

முஸ்லீம்கள் மீது இந்தியா தொடுத்த தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் தான் மும்பை, தில்லி போன்ற இடங்களில் நடத்தப்படும் குண்டுவெடிப்புகள். ஆனாலும் எந்த குண்டுவெடிப்பும் அதுவும் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் வைக்கும் குண்டுகள் பிரச்சனைக்கும் தீர்வாகாது. அரசாங்கம் செய்யும் எல்லா தவறுக்கும் அதன் குடிமக்கள் பெறுப்பாக முடியாது.

தில்லியில் நடந்த குண்டுவெடிப்பு என்றாலும் சரி, லண்டனில் நடக்கும் குண்டுவெடிப்பு என்றாலும் சரி அது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று நினைக்கும் பொழுது பிற மக்களை அடிமைப்படுத்த ஆதிக்கத்திற்குள்ளாக்க நினனக்கும் பொழுது தான் போராட்டங்களும், தீவிரவாதங்களும், வன்முறைகளும் வெடிக்கின்றன.

ஒரு இனத்தின் சுதந்திரமும், தன்னுரிமையும் மதிக்கப்பட்டால் குண்டுவெடிப்புகளுக்கு இடமிருக்காது.

தில்லியில் நடந்த குண்டுவெடிப்புகளை மிக வன்மையாக கண்டிப்போம்

அடக்குமுறை

அரசாங்கத்தின் அடக்குமுறைகள் என்றைக்குமே அடித்தட்டு மக்களிடம் தான் நடக்கிறது. அது மேல்தட்டு மக்களிடம் நடந்தால் மனித உரிமை மீறல்களாக கோர்ட் வாசல்களுக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் வாழ்க்கை போராட்டத்தினை எதிர்கொள்ளும் மக்களின் பிரச்சனைகள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. எந்த வெகுஜன பத்திரிக்கையும் அது குறித்து தொடர்ந்து எழுதுவதும் இல்லை.

தமிழகத்தில் 1947க்கு பின் நடந்த அரசாங்கத்தின் அடக்குமுறைகளை பட்டியலிட்டால் அதிகம் பாதிப்புக்குள்ளானது வடமாவட்ட மக்கள் தான். இந்த அடக்குமுறைகளின் உச்சக்கட்டம் வீரப்பன் தேடுதலில் வீரப்பன் இருந்த காட்டுப்பகுதியில் வசித்த மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட கொடுமையான அடக்குமுறை.

Another memory, from a young man whose entire family was taken in, when he was 14 and his brother four: “They started beating us with all across the body and with pounding sticks all across the body. Even though my mother explained about my fathers sick with TB they didn’t stop their beating my father and they severely tortured me with electricity. They nailed my foot and tied my hands in front and kept thorn in front of me and pulled my hand and let myself fall down on thorns and they planned to shoot me as I know Kannada I understood their conversations. These tortures continued consecutively for seven days.” After this the family was separated, the father and fourteen-year-old boy booked under TADA, the sister raped in another STF camp in front of her husband, after which he left her.

A woman’s memories of the arrest of her husband by STF personnel in 1993, after Veerappan had killed 22 policemen, runs thus: “The police also did not hesitate to give bail [the family had pledged their land for Rs 10,000 to release the man after 15 days of custody] as they felt that my husband would die in custody and also could not get any information after severely torturing him thus to be in the safer side the police gave him the bail. Then we brought back my husband to home. He suffered a lot of health problem his back was severely impacted with the torture. His liver was also spoiled and he vomited blood regularly. We had taken him to both private and government hospitals and he was in government for two-three weeks, but we did not have enough money to proceed further for the treatment and brought him home. However, this process lasted for about six months, and my husband survived for about six months and then he died.”

வீரப்பன் கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற பிறகு வீரப்பனையும் மறந்து விட்டோம். அவன் பொருட்டு சித்திரவதை அனுபவித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதயும் அரசு மறந்து விட்டது. கோடி கோடியாய் கொட்டி அதிரடிப் படையை குளிப்பாட்டியாகி விட்டது.

இன்று தமிழக எல்லையை தனதாக சொந்தம் கொண்டாடி வரும் கர்நாடகா ஒரு வருடத்திற்கு முன்பாக வீரப்பன் இருக்கும் மொத்த பகுதியையும் தமிழகத்திற்கு தாரை வார்க்க தயங்கி இருக்காது. தமிழக எல்லைச் சாமி மண்ணுக்குள் சென்ற பிறகு கர்நாடகா மாவீரர்களுக்கு இன்று தான் சூடுசுரணையெல்லாம் தோன்றியிருக்கிறது போலும்


Sunday, October 16, 2005

தோழர் தமிழரசன்

தமிழ் தேசியம் தழைத்தோங்கிய பகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழ் தேசியம் பற்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவு செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் சரியாக வெளிக்கொணரப்படவில்லை என்பது மட்டும் அல்லாமல் இதனை திரித்து பொய்க்கதை எழுதி மறக்கடித்தப் பெருமையும் வெகுஜன ஊடகங்களுக்கு உண்டு.

1947 விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆதிக்க சாதி பண்ணைக்காரர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலக்கட்டத்தில் இந்தியாவெங்கும் இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த இயக்கங்களின் செயல்பாடு தீவிரமாகி 1960களின் பிற்பகுதியில் மேற்குவங்காளத்தில் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் அமைப்பான மக்கள் யுத்தக் குழு - People's War Group - PWG தோன்றியது. இந்த அமைப்பு மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்தது.

கடலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், பென்னாடம், தருமபுரி போன்ற பின் தங்கிய கிராமங்களில் தான் இந்த இயக்கம் வளர துவங்கியது. இதற்கு இந்தப் பகுதியில் நிலவிய சமூக, பொருளாதார சூழலும் முக்கிய காரணம். வடமாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். இந்தப் பகுதியின் முக்கிய பொருளாதாரம் முந்திரி. முந்திரி வருடம் முழுக்க மகசூல் கொடுக்க கூடிய பயிர் அல்ல. வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே முந்திரி கிடைக்கும். பிறகு சீண்டுவார் இல்லை. இந்த முந்திரி காடுகளும் சிறு விவாசாயிகள் சொந்தமாக வைத்துக் கொள்ளக்கூடியவை அல்ல. பெரும் பண்ணைக்காரார்கள் வசம் தான் நிலங்கள் இருந்தன.

இப்பகுதியின் பெரும்பான்மை மக்களான வன்னிய, தலித் மக்கள் இந்தப் பண்ணைக்காரர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருந்து வந்தனர். பிற மாநிலங்களில் பண்ணைக்காரர்கள் - அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான போராட்டம் வெடித்த பொழுது இப்பகுதியிலும் இந்தப் போராட்டம் வேரூன்ற தொடங்கியது. நக்சலைட் இயக்கங்களும் தமிழ் மண்ணில் அறிமுகமாகின.

நக்சலைட் இயக்கமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் பின் தமிழ் தேசியமாக, ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை அடையும் இயக்கமாக உருவெடுத்தது. தமிழகத்தின் முதல் குண்டுவெடிப்பும் இப்பகுதியில் தான் நடந்தேறியது. அதனை அறிமுகப்படுத்தியர் பென்னாடத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள். பள்ளி ஆசிரியராக இருந்த புலவர் கலியபெருமாள் "மக்கள் யுத்தக் குழு" இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். மேற்குவங்க நக்சலைட் தலைவர் சாரு மஜும்தாருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

புலவர் கலியபெருமாள் மூலமாக நக்சலைட் இயக்கம் வடமாவட்டங்களில் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு புலவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட பொழுது அந்த குண்டுகள் வெடித்ததால், தீவிரவாத இயக்கம் பற்றிய செய்திகள் வெளிவரத்தொடங்கின. அவர் மீது கொலைக்குற்றம் போன்ற பொய்வழக்குகள் சுமத்தப்பட்டு அரசு அவரை சிறையில் அடைத்தது.

நக்சலைட் இயக்கத்தின் திருப்பு முனையாக இத் தருணத்தில் தோழர் தமிழரசன் உருவாகினார். 1980களில் இந்த இயக்கம் மிக வேகமாக வளர முக்கிய காரணம் தோழர் தமிழரசன் தான். People war Group இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் அவர் உயர்ந்தார். சாதியில்லா சமுதாயம் அமைப்பது, பண்னை நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுப்பது போன்றவை இவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. அதே சமயத்தில் தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளில் நம்பிக்கை உடையவராக தமிழரசன் விளங்கினார்.

1985ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு ஆதராக தமிழகத்தில் உணர்வு அலைகள் கரைபுரண்ட பொழுது, தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றோர் தங்களை தமிழ்தேசிய உணர்வுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இதனால் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர். இதன் பிறகு தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக "தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)" என்ற அமைப்பை தோழர் தமிழரசன் தோற்றுவித்தார்.

பொறியியல் பயின்ற தோழர் தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவராக இருந்தார். 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. மைய அரசின் தளங்களை தான் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கியது. தனித்தமிழ்நாட்டை உருவாக்கி அங்கு சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயத்தை அமைப்பது தான் தன்னுடைய லட்சியம் என்று தமிழரசன் முழங்குவார். பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் ஏழைகளுக்கு அளிப்பார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது லட்சியமாக இருந்தது.

1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவரை அடையாளம் தெரியாமல், அவர் "தோழர் தமிழரசன்" தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுட்டிருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்ல வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். இதை விட ஒரு சோகமான விடயம் பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தோழர் மறைந்து போனார்.

கொல்லப்பட்டது தமிழரசன் தான் என்று பிறகு கேள்விபட்டவுடன் பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் நிலவிய சோகம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. இப்பகுதி மக்கள் தமிழரசனை நேசித்தனர். அவரது முகம் கூட தெரியாமல் அவரது சேவைகள் மட்டுமே பலர் நினைவில் இருந்தது. இன்றும் நிற்கிறது.

தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றவையாக தெரியலாம். ஆனால் 1980களில் இப் பகுதியில் நிலவிய வறுமை, அறியாமை போன்றவையுடன் பொருத்தி பார்த்தால் அவருடைய போராட்டத்தின் பொருள் விளங்கும்.

தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி குறித்து பொய்க்கதைகளை தான் அவிழ்த்து விட்டனவே தவிர ஒரு பத்திரிக்கை கூட உண்மை நிலையை எழுதவில்லை.

தமிழக வரலாற்றில் மக்களை நேசித்த மாமனிதர்கள் பட்டியலில் தமிழரசனின் பெயர் முக்கியமானது. என்னைப் பொருத்தவரை நான் வாழ்ந்த காலக்கட்டத்தில் கண்ட முக்கியமான தியாகம் இது (இதேக் காலக்கட்டத்தில் என்னை மிகவும் பாதித்த மற்றொரு நிகழ்வு திலீபனின் மரணம்)

(செப்டம்பர் 1ம் தேதி அவரது நினைவு நாள் அன்று இந்தப் பதிவை எழுத நினைத்து மிக தாமதமாக வெளிவருகிறது)

Saturday, October 15, 2005

காமெடி மலர் - 1

தேர்தல் என்றாலே எனக்கு ஒரே கும்மாளம் தான். மற்ற நேரங்களில் தினமலரை "டாய்லெட்" டிஷ்யுவாக மட்டுமே பயன்படுத்தும் நான், தேர்தல் வந்தால் "டாய்லெட்டில்" படித்து சிரித்து விட்டு பின் "டாய்லெட்" டிஷ்யுவாக பயன்படுத்துவேன். அவ்வாறு படித்து, சிரித்த சில வரிகளை வழங்குவது தான் "காமெடி மலர்" பகுதியின் முக்கிய நோக்கம்.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற நல்லெண்ணம் காரணமாக இந்தப் பகுதிகளை வழங்குவதில் மிக்க மகிஷ்ச்சி அடைகிறோம்

ஸ்மெலிவரும் இடங்களில் எல்லாம் நம்ம தொலைக்காட்சி காமெடி ஷோவில் சிலர் பிண்ணனியில் சிரிப்பார்களே, அது போல கற்பனை செய்து கொண்டே படித்தால், இன்னும் சுவாரசியமாக இருக்கும்

----------------

""கேப்டன் அறிவிச்சதும் தான் அறிவாலயமே உஷாராச்சாம்ங்க......''

""தமிழ்நாட்டு அரசியல்ல தனி ரூட்டுல போய்கிட்டு இருக்காரு கேப்டன்... அவர பாலோ பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு அறிவாலயம் வந்துருச்சாமா வே...'' என்று சந்தேகத்தோடு கேட்டார் அண்ணாச்சி.

""ஆமாங்க... பூகம்ப நிவாரண நிதிக்கு முதல் கட்சியா நிதியுதவி

அறிவிச்சது கேப்டன் கட்சி தானாம்... ஐந்து லட்ச ரூபாய் தரப் போறதா விஜயகாந்த் அறிவிச்ச செய்தி தெரிஞ்சி தான் அறிவாலயத்துல அவசரமா "மினி மீட்டிங்'
போட்டு முடிவெடுத்து நைட்டோட நைட்டா 20 லட்ச ரூபாய் கொடுக்கப் போறதா அறிவிச்சாங்களாம்... அதை தொடர்ந்து அடுத்த நாளு வைகோவும் நிதியுதவி அறிவிப்புக்கு ஆளானாராம்ங்க... சினிமாவுல இருக்கும் போதும் இந்த மாதிரி விஷயங்கள்ல முதல் ஆளா இருப்பாராம் கேப்டன்... அரசியலுக்கு வந்த பிறகும் அவரு ஸ்டைல் மாறலீங்களாம்...'' என்று சொல்லி முடித்தார் அந்தோணிசாமி.

ஞானப்பழங்கோ...

இந்தப் படங்களுக்கு விளக்கம் தேவையில்லை





தேர்தல் ஜல்சா - 1

சென்னை அக் 15 - தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை சரியாக கணிப்பதில் எப்பொழுதுமே முன்னிலையில் இருப்பது தினமலர் பத்திரிக்கை தான். தினமலரின் கணிப்பு எப்பொழுதுமே மிகச் சரியாக இருக்கும் என்பதை நாம் கடந்த தேர்தலில் பார்த்திருக்கிறோம்.

கடந்த தேர்தலில் பாமகவின் ஓட்டு வங்கி, தீரன், பு.தா. அருள்மொழி போன்ற மாபெரும் தலைவர்களால் ரஜினிக்கு ஆதரவாக மாறியதை சரியாக கணித்த தினமலர் மறுபடியும் தன் கணிப்பை ஆரம்பித்திருப்பதை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் தமிழகத்தின் "கிறுக்கு ஸ்டார்" பின் தமிழக இளைஞர்கள் அணிவகுத்து பாமகவை 6 இடங்களிலும் தோற்கடிக்கத்ததை சரியாக கணித்த தினமலர், இம் முறை அடுத்த எம்.ஜி.ஆராக விஜயகாந்த் உருவாகப் போவதாக கணித்துள்ளது

பாமக, திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழகத்தில் இருக்கும் பிறக் கட்சிகள், சாதி சங்கங்கள் என அனைத்திலும் இருக்கும் இளைஞர்கள், முதியவர்கள், தாய்க்குலங்கள், மழலைகள் என அனைத்து பிரிவினரும் கடந்த தேர்தலில் "கிறுக்கு ஸ்டார்" பின் அணிவகுத்ததைப் போல இம்முறை விஜயகாந்தின் கட்சியில் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருப்பதாக ஆருடம் கூறி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை தினமலர் ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி வாய்ஸ் கொடுத்ததால் ராமதாசின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றும், பாமக காலியாகி விடும் என்றும் லட்சக்கணக்கான தமிழ் வலைப்பதிவு சமூகத்தில் கடந்த தேர்தலின் பொழுது மிகச் சரியாக முழுக்கமிட்ட வலைப்பதிவு உலகின் "டம்மி ஸ்டார்" ரஜினி ராக்கி அவர்கள், இம் முறை விஜயகாந்த் வருகையால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கூடாரம் காலியாகி விடும் என்று கணித்துள்ளார். அவரது இந்தக் கணிப்பு வலைப்பதிவு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வலைப்பதிவு உலகின் ராஜரிஷி கத்ரி அவர்களும் பாமக மண்ணைக் கவ்வ வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்திருப்பதால், வலைப்பதிவு உலகில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

இதற்கிடையே ஒரு முக்கிய திருப்பமாக வலைப்பதிவு உலகின் "...குறி" ஸ்பெஷலிஸ்ட பாட்சாவசந்த் அவர்கள், திருமாவளவனுக்கு எதிராக கோஷ்டி தாவியுள்ளார். இந்த நிகழ்ச்சி வலைப்பதிவு சமூகத்தை பிளவுபடுத்தும் என்றும், எதிர் கோஷ்டிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்றும் ஆட்டோவுக்கும், ஆசிடுக்கும் பயந்து கொண்டு "மாஸ்க்" அணிந்தும் பயம் தெளியாமல், சத்தியமங்கலம் காடுகளில் பதுங்கியிருக்கும் வாய்மூடி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கருத்துகளை மிகக் கடுமையாக மறுத்துள்ள வலைப்பதிவு உலகின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் மழலி அவர்கள் பண்ருட்டியில் இருந்து சில புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்துள்ளார். இது வலைப்பதிவில் உள்ள எதிர் கோஷ்டிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன பதில் தேடலாம் என்பது குறித்து அவர்கள் "பரங்கிமலைக்கு" சென்று தவம் இருந்து ஆரயப் போவதாக கடைசி செய்திகள் கூறுகின்றன.

தமிழ்மணத்தில் இருந்து "வீரவன்னியன் -
வெற்றி எமதே" பகுதிக்காக
மாம்பழத்து வண்டு

Thursday, October 13, 2005

பார்ப்பான் என்ற சொல்லை அழிப்போம்

மகாகவி பாரதியார் "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியை துரையென்ற காலமும் போச்சே"

என்று ஆனந்தமாக சுதந்திரப் பள்ளு பாடினார். தந்தை பெரியார் காலத்தில் தொடங்கி இன்றளவும் பார்ப்பான், பார்ப்பனீயம் போன்ற

சொற்கள் வழக்கில் இருந்து வருகிறது. இது சாதியை குறிக்கும் சொல்லாக இல்லாமல், ஒரு மேல் தட்டு இனத்தின் ஆதிக்க எண்ணத்தை

குறிக்கும் சொல்லாக, கீழ்தட்டு மக்களை மதம், சாதி போன்ற பல பிரச்சனையின் காரணமாக ஒடுக்கி வைக்கும் ஒரு போக்கின்

அடையாளமாக நினைக்கப்படுகிறது. அத்தகையோரை எதிர்க்கும் எண்ணத்தின் அடையாளமாக தான் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது எழுந்தது.

சாதிகள் ஓழிய வேண்டும் என்று பாடிய முண்டாசு கவிஞன் ஏன் பார்ப்பான் ஓழிய வேண்டும் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

ஆனந்தப் பள்ளு தவிர வேறு சில இடங்களிலும் பாரதி இந்த வார்த்தையை பிரயோகித்து இருக்கிறான்.

நான், பாரதியை இங்கு எந்த சாதியுடன் இணைக்க வில்லை என்பதை ஆழமாக, பல முறை வலியுறுத்தி சொல்லி விட நினைக்கிறேன்.

பாரதி சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்க் கவிஞன். அவனை ஆழமாக போற்றுகிறவர்களின் நானும் ஒருவன்.

தான் எந்த இனத்தில் இருந்து வருகிறானோ, அதே இனத்தை ஏன் பாரதி கோபமாக இழித்துரைக்க வேண்டும். சாதிகள் இல்லை என்று பாடிய பாரதி ஏன் பார்ப்பானை மட்டும் இகழ்ந்துரைக்க வேண்டும்.

அந்தளவுக்கு அந்த சமுதாயம் மேல் அவன் கடுங்கோபம் கொண்டான். அதற்கு காரணம் மொத்த சாதி அல்ல. ஆதிக்க பார்ப்பன மன்ப்பான்மை மற்றும் அந்த ஆதிக்க மனதால் பிற சாதிகளை அடக்கி ஓடுக்க வேண்டும் என்று நினைக்கும் அந்த எண்ணத்தை தான் பாரதி, பெரியார் தொடங்கி டாக்டர் ஐயா வரை பின்பற்றினார்கள்

என்னுடைய பதிவுகளில் கூட பார்ப்பான் என்று நான் கூறுவது சாதீயம் பேசுவதாகவும், ஒரு இனத்தை திட்டுவதாகவும் எனக்கு வந்த "லட்சக்கணக்கான" மின்னஞல்களில் பல பிராமண நண்பர்கள் ( டோண்டு மாமா இந்த வார நட்சத்திரமாக இருப்பதால் அவரை

குஷிப்படுத்த மற்றொரு முறை "பிராமண நண்பன்" இந்த வார்த்தையை பிரயோகிக்கிறேன் ) குறைப்பட்டுக்கொண்டார்கள். அவர்களின்

குறை தீர்ப்பதை ஒரு தார்மீக கடமையாக கொண்டு, இருந்த நாட்டை விட்டு தாய் மண்ணுக்கு வந்துள்ள இந்த நேரத்திலும் மினி பஸ்

எல்லாம் பிடித்து, சைபர் கபேவில் இந்த பதிவை சுரதா கொண்டு துன்பப்பட்டு அடித்து என் மனசாட்சியை இங்கு பறைசாற்றி விடுவது

என்று முடிவு செய்துள்ளேன். அப்படி செய்யா விட்டால் இந்த பதிவை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதையும் என்

சார்ப்பாக நான் வலியுறுத்த நினைக்கிறேன் (சரி...பெரிய பீட்டரு தான்..யாரோ ஒருவருடைய சாயல் வரனும்னு இவ்வளவு கஷ்டப்பட்டு

நீட்டி முழக்க வேண்டி இருக்கு)

பாரதி, பெரியார் என்று பெரிய மனிதர்களால் தொடங்கப் பட்ட பிராமண எதிர்ப்பு இன்று சுருதி குறைந்து விட்டது. இன்றைக்கு பிராமண

எதிர்ப்பு தேவையா என்பதும் ஒரு கேள்வி ?

பிராமண எதிர்ப்பு, பிராமணர் அல்லாத பிற சமூகத்தை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார போன்ற நிலைகளில் உயர்த்த எழுந்த

கோஷம். அந்த கோஷம் பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டது. இன்றைக்கு எல்லா நிலைகளிலும் பிராமணர்

அல்லாத சமுதாயம் பிராமணர்களை மிஞ்சி கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் அளவுக்கு முன்னேற வேண்டும் என்ற நிலை மாறி,

அவர்களுடன் போட்டியிட வேண்டும் என்ற நிலையும் மாறி, இன்று ஒரு பெரிய சமன்பாடு நிலவுகிறது. இத்தகைய சூழலில் பிராமண

எதிர்ப்பு தேவை தானா ?

ஏன் வலைப்பதிவுகளில் பிரமணர், பிரமணர் அல்லாதோர் பிரச்சனை நீடிக்க வேண்டும் ?

எனவே பார்ப்பான் என்ற சொல்லை அழித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன். இதனை வலைப்பதிவுகளில் அறிவித்து, என்னுடைய பதிவின் பெயரையும் மாற்றி வேறு ஒரு புதிய தளத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

இந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாட, அம்மா ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயிட்டு வாடா, பல வருஷம் கழிச்சி ஊருக்கு வந்திருக்க என்று

சொல்ல நானும் கோயிலுக்கு சென்று வழிபட்டு, பார்ப்பான் என்ற சொல்லை நான் நீக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானத்தை கடவுள் சந்நிதியில் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

இந்த தீர்மானத்துடன் கோயிலுக்கு சென்றால்...அங்கு ஒரு பெரிய பலகை, கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை ? நான் நுழைய அனுமதி இல்லை என்றால் வேறு யார் நுழையலாம் ? பார்ப்பன எதிர்ப்புக்கு இன்னமும் அவசியம் இருக்கிறது என்பது அப்பொழுது தான் எனக்கு உரைத்தது ?

ஸ்ரீரங்கம் ரங்கநாதனிடம் கோபித்துக் கொண்டு வேகமாக வெளிவருகிறேன், மற்றொரு பலகை - இங்கு தமிழிலும் அர்ச்சனை

செய்யப்படும் ? தமிழ்நாட்டில் தமிழிலும் என்று ஒரு அவமதிப்பா என்ற கோபமும் என்னை வெறிகொள்ள வைத்தது.

பார்ப்பானை கருவறையில் இருந்து நீக்கும் வரை பார்ப்பான் என்ற வார்த்தையும் தொடர தான் வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்

Monday, October 10, 2005

தமிழ் சினிமாவின் விடிவெள்ளி - தங்கர்பச்சான்

தமிழகத்தில் எத்தனையோ சினிமாக்காரர்கள் தோன்றியிருக்கிறார்கள், ஸ்டைல் என்ற பெயரில் ஊரை கெடுத்து குட்டிச் சுவராக்கியிருக்கிறார்கள், லிப் கிஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ச்சி புயலால் நாசமாக்கியிருக்கிறார்கள், "அவள் அம்மா என் காதலி, என் அப்பா அவள் காதலன்" போன்ற அற்புதமான தத்துவ படங்களை கொடுத்திருக்கிறார்கள், நாளை நாம் தான் தமிழக முதல்வர் என்ற கனவில் கையை சுற்றி சுற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் இமயங்களின் நாறிப் போன கதைகளுக்கு மத்தியில் "வன்னிய பூமியில்" இருந்து தோன்றிய தங்கர்பச்சானின் படங்கள் தான் சனங்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பலக் காலக்கட்டங்களில் பலர் உருவாகியிருக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் இருந்து வரும் கலைஞர்களால் தான் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த முடிந்திருக்கிறது. சினிமாவின் தரம் என்பது வெறும் கிராபிக்கல் அம்சங்களாக, டெக்னிக்கல் சமாச்சாரங்களாக இருப்பதில்லை. கதையம்சம் தான் படத்தின் தரமாக இருக்க முடியும்.

தமிழ் சினிமாவின் ஸ்டீரியோடைப் படங்களுக்கு மத்தியில் கிராமத்தின் ராஜா - பாரதி ராஜா, தமிழ் சினிமாவின் பாதையை மாற்றி அமைத்தார். சமஞ்சது எப்படி என்ற ரீதியில் பாடல்கள் எழுதிய தாடி மற்றும் குடுமிகளுக்கு மத்தியில் அற்புதமான வைர வரிகளை எழுதிய வைரமுத்து, வன்னிய பூமியின் அறிவுமதி அனைவரும் கிராமத்தான்கள் தான். என்னுடைய தமிழ் ஆசிரியர் கிராமத்தான்களால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்றார். அது உண்மை தான் என்பதை இவர்களைப் போன்றவர்கள் தான் நிருமித்துக் கொண்டிருக்கிறார்கள்

தமிழ் சினிமாவில் பலர் தோன்றியிருந்தாலும், யதார்த்தம், நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு போன்றவற்றுக்கு இங்கு பஞ்சம் அதிகம். அதனை களைந்தவர் தங்கர்பச்சான் தான் என்று உறுதியாக சொல்லலாம். தன்னுடைய அழகி மூலம் நிஜ வாழ்க்கையின் பல யதார்த்தங்களை திரையில் கொண்டு வந்தார். இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இது வரை திரையில் தோன்றாத வன்னிய பூமியை கொண்டு வந்தது. பலாப்பழத்தின் வாசனையை தமிழ் சினிமாவில் காணக் கூடிய முதல் வாய்ப்பு அப்பொழுது தான் கிடைத்தது.

அவருடைய தற்போதைய "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" என்ற படத்தை பார்க்கும் பொழுது நான் என் வாழ்க்கையில் கண்ட பல நிகழ்ச்சிகள் நெஞ்சில் உருண்டோடியது.

என்னுடைய அத்தை ஒருவர் இருக்கிறார். அப்பாவின் தங்கை. ஜெயங்கொண்டத்தில் அரசு வேலையில் இருக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். குடிப் பழக்கம் உடையவர். தினமும் ஒயின் ஷாப்பிலும், சாராயக் கடையிலும் தான் வாசம் செய்வார். வீட்டிற்கு வரும் பொழுது தள்ளாடிக் கொண்டே தான் வருவார். கொஞ்சம் கூட பொறுப்பு இருக்காது. அரசு வேலைக்கு ஒழுங்காக செல்ல மாட்டார். கிடைக்கிற எல்லா லோனும் எடுத்து விடுவார். லோன் போக வரும் சம்பளம், சம்பள தேதியில் பிராந்திக் கடையில் கரைந்து போய் விடும். பிறகு வீட்டில் அடி தடி தான். அத்தை கஷ்டப்பட்டு சில வேலைகளுக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். அரசு வேலையில் இருந்தாலும், வருகிற சம்பளத்தை வைத்துக் கொண்டு சுகமாக வாழலாமே என்று பலர் புத்தி மதி சொல்வார்கள். ஒன்றும் காதில் ஏறாது. சம்பள நாள் வந்தால், நேராக அத்தை அவர் ஆபிசுக்கு சென்று விடுவார். அப்பொழுதெல்லாம் வங்கிகளில் பணம் நேரடியாக செல்லாமல் கவரில் சம்பளம் வரும். அவரிடம் இருந்து சம்பள கவர் பிடுங்க ஒரு பெரிய யுத்தமே நடக்கும். பெரிய கச்சேரியே அலுவலக வாசலில் நடக்கும். இந்த கூத்துக்கு பிறகு வேலைக்கு செல்வதையும் மாமா குறைக்க ஆரம்பித்து விட்டார். எதற்கு வம்பு அரசு வேலையாயிற்றே, வேலை போய் விடுமே, என்றாவது ஒரு நாள் திருந்துவார் என்ற எண்ணத்தில் அப்படியே விட்டு விட்டார்கள். அத்தை பல கஷ்டங்களை அனுபவித்தார். இப்படி தொடர்ந்த அவர் வாழ்வில் என் அத்தைப் பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழா ஒரு திருப்புமுனையாக அமைந்து இவரா இப்படி என்று வியந்து போனோம் ? வாழ்க்கையில் ஏற்படும் ஒரு கணம் சிந்தனை, பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. பலர் கூறிய புத்திமதி அவரை மாற்றவில்லை. ஆனால் சில கணம் தன் மகளை பெரிய மனுஷியாக பார்த்த பொழுது அவருக்குள் ஒரு தீப்பொறி எழுந்து அவரது வாழ்க்கையை மாற்றி விட்டது.

வாழ்க்கை ஒரு படிப்பினை. வாழ்க்கையில் நடக்கும் பல மாற்றங்களை திரைப்படத்தில் கொண்டு வருவது முடியாத காரியம். அந்த முடியாத காரியத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தங்கர்பச்சான் ஏற்படுத்தி இருக்கிறார். "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" படத்தை பார்த்த பொழுது எனக்கு என் மாமாவின் முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது. தங்கர்பச்சான் முகத்திற்கும் அவர் முகத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. கதையில் நடக்கும் பல, நிஜ வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. என் வாழ்க்கையில் நான் அனுபவிக்க வில்லை என்றாலும் கண் கூடாக பார்த்து இருக்கிறேன்.

அவருடைய சொல்ல மறந்த கதையிலும் சரி, அழகியிலும் சரி வாழ்க்கையின் யதார்த்தம் பிரதிபலிக்கிறது. சொல்ல மறந்த கதையில் சேரன் அனுபவிக்கும் மன உளைச்சலை அவ்வளவு சரியாக இது வரை தமிழ் சினிமாவில் யாரும் பிரதிபலித்தது இல்லை என்றே நினைக்கிறேன். அழகி பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

இந்த திரைப்படங்களை போலவே அவரின் ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு பெரிய மரத்தைப் பற்றிய கதை. ஒரு மரத்தை சுற்றி நிகழும் நினைவுகள், பொருட் செலவுக்காக அந்த மரம் வெட்டப்படும் பொழுது ஏற்படும் உளைச்சல். அதனை சுற்றி பின்னப்பட்ட உணர்வு அலை. எனக்கும் அது போன்ற நினைவுகள் உண்டு.

உண்மையான சனங்களின் கலைஞனாக தங்கர்பச்சானை தான் நினைக்க முடிகிறது.

திண்ணையில் விமர்சனம் எழுதியிருக்கும் கோவிந்த் கூறி இருப்பது போல தமிழ் சினிமாவிற்கு தங்கத் தாமரை பெற்று தரும் தகுதி தங்கர்பச்சானுக்கு மட்டுமே உண்டு.

Thursday, October 06, 2005

டாக்டர் ஐயா

பொதுவாக தலித், வன்னியர் என்ற சொல்லப்படும் மக்களை சாதியை விலக்கிவிட்டு பார்த்தால் இருவரின் வாழ்க்கை தரத்திற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அடித்தட்டு உழைப்பாளிகளாக இருப்பவர்கள் இம் மக்கள் தான். ஆனால் வன்னியர்களுக்கு தாம் தலித்துகளை விட மேலானவர்கள் என்ற எண்ணம் உண்டு. எங்கள் கிராமத்தில் முக்கியமான இரு சாதிகள் முதலியார் மற்றும் வன்னியர். வன்னியர்கள் தலித்துகளை எப்படி கீழாக பார்க்கிறார்களோ அதைப் போலத் தான் முதலியார்கள் எங்களைப் பார்ப்பார்கள்.

சமுதாயத்தின் கீழ்தட்டில் இருந்த இரு சமுதாயங்கள் இரு வேறு மனோபாவங்களால் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கீழ் மட்டத்தில் இருந்த இரண்டு சமுதாயங்களின் விழிப்புணர்வுக்கு காரணகர்த்தாக்கள் டாக்டர் ராமதாஸ் மற்றும் திருமாவளவன்.

வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே பல கலவரங்கள் நடந்திருக்கின்றன. தலித்துகள் மீதான வன்னியர்களின் தாக்குதலையும் நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஆனால் வன்னியர்களின் இந்த மனோபாவத்தை மாற்ற டாக்டர் ராமதாஸ் பாடுபட்டார் என்பது தான் எந்த மீடியாக்களும் சொல்லாத உண்மை.

டாக்டர் ராமதாசின் அரசியல் வரலாற்றை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கொள்கையுடன் இருந்த காலம். கொள்கையை காற்றில் பறக்க விட்ட காலம். அவர் கொள்கையுடன் இருந்த காலத்தில் யாருமே அவரை கண்டுகொள்ள வில்லை. கொள்கையை காற்றில் பறக்க விட்டப் பிறகு தான் கலைஞர், ஜெயலலிதா என அனைவருக்கும் அவர் தேவைப்படும் பொருளாகிவிட்டார். மீடியாக்களும் அவரை கண்டு கொண்டு கிழிக்க தொடங்கின.

குடிதாங்கி என்று ஒரு ஊர். ஒரு தலித் இறந்து விட்டார். தலித்தின் உடல் வன்னியர்கள் இருக்கும் கிராமத்தின் வழியாகத் தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒரு தலித் சடலம் வன்னியர்கள் இருக்கும் பகுதியில் செல்வதை வன்னிய மக்கள் அனுமதிக்கவில்லை. பிரச்சனை பெரியதாகி கலவரம் வரும் நிலை. டாக்டர் ராமதாசுக்கு இந்த செய்தி தெரியவந்தது. உடனடியாக இந்த கிராமத்திற்கு வந்தார். வன்னிய மக்களிடம் பேசிப் பார்த்தார். ஒன்றும் நடக்க வில்லை. வன்னிய மக்களின் எதிர்ப்பை மீறி அந்த தலித்தின் சடலத்தை வன்னிய கிராமத்தின் வழியாகவே கொண்டு சென்று இறுதிச்சடங்கள் செய்யவைத்தார் டாக்டர் ராமதஸ். வன்னியர்களின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்து நெகிழ்ந்துப் போன திருமாவளவன் டாக்டர் ராமதாசுக்கு "குடிதாங்கிக்கொண்டான்" என்று பெயர் சூட்டினார்.

அரசியல் நிகழ்வுகள் இருவரையும் பிரித்து விட்டது. இப்பொழுது சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் இரு சமுதாயங்கள் ஒன்று சேர்ந்திருப்பது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமதாசின் தற்போதைய அரசியல் கொள்கை பிடிப்புடன் இருப்பதாக நான் வாதாடிக்கொண்டிருக்க மாட்டேன். அதில் எந்தவித கொள்கையும் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் கொள்கை பிடிப்புடன் இருந்த பொழுது இந்த அரசியல் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்றே கலைஞர் நினைத்தார். திமுகவின் பாரம்பரிய ஓட்டு வங்கிகளான வன்னியர்கள் எங்கே பாமக வுடன் சென்று விடுவார்களோ என்ற அவரின் அச்சம் அவரை பாமக வை அழிக்க தூண்டியது.

ஒரு காலத்தில் பாமக வுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே தருவேன் என்று கூறிய கலைஞர் இன்று பல பாரளுமன்றத் தொகுதிகளையும், ராஜ்சபா இடத்தையும் கொடுத்திருக்கிறார். இதற்கு டாக்டர் ராமதாஸ் கொடுத்த விலை "கொள்கைகள்". கொள்கைகளுடன் இருந்திருந்தால் இன்று ராமதாஸ் காணாமல் போயிருப்பார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் ராமதசைப் பற்றி பல கட்டுரைகளை அவர் கொள்கைப் பிடிப்புடன் இருந்த பொழுது எழுதியிருக்கிறார். அது எல்லாம் அச்சுப் பிரதிகள். கிடைத்தால் வெளியிடுகிறேன். தமிழகத்தில் கொள்கை பிடிப்புடன் இருக்கும் ஒரே அரசியல் தலைவர் டாக்டர் ராமதாஸ் தான் என்று எழுதியிருப்பார். ஆனால் அந்தக் கட்டுரையை இப்பொழுது படித்தால் நல்ல நகைச்சுவையாக தோன்றும்.

திருமாவளவனுக்கும் ராமதாசுக்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் கீழ்தட்டில் இருக்கும் தன் சமுக மக்களுக்காக போராடினார்கள். தேர்தல் அரசியலை வெறுத்தார்கள். தேர்தல் மறுப்பு இயக்கங்களையும் நடத்தினார்கள். ஆனால்
அதனால் ஒரு பலனும் கிடைக்க வில்லை.

1989 தேர்தலை புறக்கணிப்போம் என்றார் ராமதாஸ். பல பூத்துகளில் ஒட்டு பதிவே நடக்க வில்லை. அதனால் என்ன பலன். ஒன்றுமேயில்லை. அதையே தான் திருமாவளவன்
செய்தார்.

அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் மூலமாக சாதிக்கலாம் என்று நினைத்தார்கள். தனித்து நின்றார்கள். ஒன்றும் சாதிக்க வில்லை.

தேர்தலில் நிற்கும் பொழுது கட்சி தொடர்ந்து தோல்வியை தழுவும் பொழுது கட்சித் தொண்டர்கள் சிதறிப் போவார்கள்.

அது தான் நடந்தது. 1996 தேர்தலில் 4 தொகுதிகளை மட்டுமே பா.ம.க தனித்து நின்று வென்றது.(ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வும் 4 இடங்களில் மட்டுமே வென்றது)
கட்சி சிதறிப் போகும் அபாயம் ஏற்பட்டது. அங்கு தான் கொள்கைகளை துறந்து ராமதாஸ்
ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். இதைப் போல தான் அன்று வைகோவும் ஜெயலலிதாவிடம்
கூட்டணி சேர்ந்தார். அந்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டிருந்தால்
பா.ம.க. காணாமல் போயிருக்கும்.

அதைத் தான் இன்று திருமாவளவனும் செய்திருக்கிறார். சிதம்பரம் தொகுதியில்
கடுமையான போட்டிக்குப் பிறகும் வெற்றி கிடைக்கவில்லை என்னும் பொழுது தொண்டர்கள்
விரக்தி நிலைக்கு சென்று விடுவார்கள். கட்சி காணாமல் போய் விடும்.

இன்றைய இந்திய அரசியலின் யதார்த்த நிலை கூட்டணி தான்.
இந்த போட்டியில் தொடர்ந்து இருக்க கூட்டணி வேண்டும்.

(முந்தைய ஒரு பதிவின் மீள்பதிவு)

குஷ்பு - கலாச்சாரம் - நைட் கிளப்

திரு.பத்ரி தனது பதிவில் இந்து நிருமா சுப்ரமணியத்தின் கருத்தை தனக்கு துணைக்கு அழைத்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பாமாகவும், திருமாவளவனும் எந்தக் கருத்தினை கூறினாலும் மொத்த பத்திரிக்கை உலகின் மடிசாரும், குடிமிகளும் கிளம்பி விடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

குஷ்பு ஒரு கருத்தினை கூறுவது அவரது தனி மனித உரிமை என்றால் டாகடர் இராமதாசும், திருமாவளவனும் தங்கள் எதிர்ப்பினை தெரிவிப்பதும் தனி மனித உரிமை தான். குஷ்பு என்ன வேண்டுமானாலும் கூறலாம், அதை யாரும் கண்டு கொள்ள கூடாது என்று "தனி மனித உரிமை காவலர்களாக" பத்ரியும், நிருபமாவும் தங்களை நினைத்துக் கொள்வதை எந்த வகையில் சேர்ப்பது ?

டாக்டர் இராமதாஸ், நடிகர் ரஜினி காந்த்தை விமர்சித்ததை தவறு என்று வாதிட்ட பத்திரிக்கைகள், அன்றைக்கு இராமதாசின் தனி மனித உரிமையைப் பற்றி யோசிக்காமல் இருந்ததன் மர்மம் புரியாதா நமக்கு ? அன்றைக்கு நிருபமாவும், பத்ரியும் எங்கே ஒளிந்திருந்தார்கள் என்று கேட்க நான் விரும்பவில்லை

நாட்டில் யார் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம். அது இந்திய அரசியல் சாசனம் இந்திய குடிமக்களுக்கு கொடுத்திருக்கும் ஜனநாயக தனிமனித உரிமை. அது தனி மனித உரிமை காவலர்களுக்கு புரியவில்லையா ? புரிந்திருந்தும் பாமாக எதிர்ப்புணர்வு மட்டும் தான் அவர்களது அறிவுஞீவி மூளைக்கு விளங்குகிறது போலிருக்கிறது.

நிருபமா தன்னுடைய கட்டுரையில் சினிமா பாடல்களில் வரும் ஆபாச வரிகளை ஏன் கண்டு கொள்ள வில்லை என்று கேட்கிறார்
The double standards of this brigade take the breath away. Those spearheading the protests against a statement by the actress Khushboo that a man should not expect virginity in his bride, have never protested against the lewd and suggestive lyrics of Tamil film songs.

தமிழ் பெருங்குடிகள் இதனை பற்றி கொஞ்சம் கவனிக்க வேண்டும். நம் தமிழ் மக்களின் ஞாபக மறதியை கருத்தில் கொண்டு போகிற போக்கில் மாமி அவிழ்த்து விட்டு செல்லும் புளுகு மூட்டை இது. டாக்டர் இராமதாசும், திருமாவளவனும் திரைப்படங்களிலும், பாடல் வரிகளிலும் வரும் ஆபாசங்கள் குறித்து போராட்டம் நடத்திய பொழுது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திரைப்படங்களில் காண்பிக்கலாம் என்றும், அது குறித்து இராமதாஸ் போராட்டம் நடத்த கூடாது என்றும் கூறிய அதே பத்திரிக்கைகள் இன்று அதனை எதிர்க்கலாமே என்று கூறுகிறார்கள்.

அப்புறம் அந்த lewd and suggestive lyrics of Tamil film songsஐ எதிர்த்தால் கவிஞர்கள் உரிமை, தனி மனித எழுத்துரிமை, கற்பனையுரிமை என்று கூறத் தொடங்குவார்கள்.

அப்புறம் இருக்கவே இருக்கு கடைசி அஸ்திரம் - நாட்டில் இது தானா முக்கிய பிரச்சனை ?

ஆம், எங்களூர் கருத்தம்மாவுக்கும், வீரலட்சுமிகளுக்கு டாக்டர் இராமதாசும், திருமாவளவனும் செய்த சேவைகளை கண்டுகொண்டு இவர்கள் பாராட்டு தெரிவித்து விட்டார்கள் ? அல்லது எங்களூர் பிரச்சனைகளை இந்துவின் நடுப்பக்கத்தில் நிருபமா மாமி எழுதி விட்டார் ?

/*

கலாசார போலீஸ்காரர்கள் வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வினால் எனக்கு சந்தோஷமே.

*/

ஐயா... உங்கள் எண்ணம் பலிக்கட்டும், எனது வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்களின் இது போன்ற எண்ணம் தான் எங்களை தொடர்ச்சியாக வெற்றி பெற வைத்து கொண்டிருக்கிறது
----------------------------

கலாச்சாரம் என்பது மாறக்கூடியது தான். குடுமி வைத்த மாமாவும், மடிசார் அணிந்த மாமியும், இன்று கிராப் கட்டிங்குடன் ஜீன்ஸ் பேண்ட் அணிவது போல, கோவணம் அணிந்த படையாச்சி இன்று பேண்ட் போடுவது போல. ஆனால் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் குடும்பம் முக்கியமானது. மேற்கத்திய நாகரிகத்திலும் கூட தன்னுடைய ஆண் நண்பியோ, பெண் நண்பியோ தனக்கே உரிமையாய் இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலானோரின் எண்ணம். யாருடனும் படுத்து விட்டு பிறகு தன்னுடன் வந்து படுக்க வேண்டும் என்று கூறுவதில்லை. இந்தியாவில் அப்படி கூறுவது புரட்சிகரமான கருத்தாக கருதும் போக்கு மும்பையில் தொடங்கி, பெங்களூரில் கிளை விரித்து இன்று சென்னைக்கு எட்டிப் பார்க்கிறது.

இதற்கு முன்பு இந்துவில் ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது.

பெங்களூர் பப்புகளில் ஒரு ஆண் மது அருந்தி கொண்டே ஒரு பெண்ணை நண்பியாக அடையமுடிகிறது. ஆனால் சென்னையில் மது அருந்த டாஸ்மாக் தான் செல்ல முடிகிறது என்ற ரீதியில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. சென்னையில் கொஞ்சமாவது இரவு கொண்டாட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் வாதம்.

பன்னாட்டு நிறுவனங்கள் சென்னைக்கு வருவதால் சென்னையிலும் நைட் கிளப்புகள் தொடங்கலாம் என்பது சரியான வாதம் தானா ? சென்னையின் கடற்கரையோர ரிசார்ட்களும், மகாபலிபுரம் ரிசார்ட்களும் ஏனைய பிற உல்லாசாங்களுக்கும் நவீனமயமான அங்கீகாரம் வழங்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கமாக தெரிகிறது. ஒரு முண்ணனி பத்திரிக்கை, கலாச்சார பத்திரிக்கை, இன்னமும் பஞ்சகட்சங்களும், குடுமிகளும் உலவும் ஒரு அலுவலகத்தில் இருந்து இந்த மாதிரியான கட்டுரை வருவது நிச்சயம் ஒரு மிகப் பெரிய கலாச்சார மாற்றம் தான்.

சமீபத்தில் இங்கிருக்கும் தொலைக்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கடைதிறப்பதால் இந்தியாவில் மாறி வரும் கலாச்சார மாற்றம் குறித்தும் அது இந்தியாவின் குடும்ப வாழ்க்கை முறைக்கு எதிர்காலத்தில் விடுக்கும் சவால் குறித்தும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இன்னமும் பாருக்கு செல்லும் என் வயதுடையோர் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியாமல் தான் போய் விட்டு வருகிறோம். "Bye dady, I am going to Pub" என்றால் செருப்பால் அடி விழும் அல்லது தன் மகன் இப்படி மாறி விட்டானே என்று வேதனைப்படும் பெற்றோர்கள் தான் இங்கு அதிகம்.

அதைத் தான் டாக்டர் இராமதாசும், திருமாவளவனும் பிரதிபலிப்பதாக நான் நினைக்கிறேன்.

Freedom - To what extent ? இது எல்லா நடுத்தர வர்க்க குடும்பத்திலும் இருக்கும் சாதாரண பழக்கம். வீட்டிற்கு சீக்கிரம் செல்வதில் தொடங்கி, அப்பாவிற்கு பயந்து/மரியாதை கொடுத்து ஒழுக்கமாக நடப்பது வரை அது தான் நமது கலாச்சாரம்.

இதனை கலாச்சார காவலர்களாக பார்ப்பது, இராமதாசும், திருமாவளவன் சொல்வதால் ஏற்படுகிற எதிர்வினை தானே தவிர உண்மையான எதிர்வினையாக இருக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை குஷ்பு கூறியதை அதிகம் பொருட்படுத்த தேவையில்லை.