Thursday, October 06, 2005

குஷ்பு - கலாச்சாரம் - நைட் கிளப்

திரு.பத்ரி தனது பதிவில் இந்து நிருமா சுப்ரமணியத்தின் கருத்தை தனக்கு துணைக்கு அழைத்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பாமாகவும், திருமாவளவனும் எந்தக் கருத்தினை கூறினாலும் மொத்த பத்திரிக்கை உலகின் மடிசாரும், குடிமிகளும் கிளம்பி விடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

குஷ்பு ஒரு கருத்தினை கூறுவது அவரது தனி மனித உரிமை என்றால் டாகடர் இராமதாசும், திருமாவளவனும் தங்கள் எதிர்ப்பினை தெரிவிப்பதும் தனி மனித உரிமை தான். குஷ்பு என்ன வேண்டுமானாலும் கூறலாம், அதை யாரும் கண்டு கொள்ள கூடாது என்று "தனி மனித உரிமை காவலர்களாக" பத்ரியும், நிருபமாவும் தங்களை நினைத்துக் கொள்வதை எந்த வகையில் சேர்ப்பது ?

டாக்டர் இராமதாஸ், நடிகர் ரஜினி காந்த்தை விமர்சித்ததை தவறு என்று வாதிட்ட பத்திரிக்கைகள், அன்றைக்கு இராமதாசின் தனி மனித உரிமையைப் பற்றி யோசிக்காமல் இருந்ததன் மர்மம் புரியாதா நமக்கு ? அன்றைக்கு நிருபமாவும், பத்ரியும் எங்கே ஒளிந்திருந்தார்கள் என்று கேட்க நான் விரும்பவில்லை

நாட்டில் யார் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம். அது இந்திய அரசியல் சாசனம் இந்திய குடிமக்களுக்கு கொடுத்திருக்கும் ஜனநாயக தனிமனித உரிமை. அது தனி மனித உரிமை காவலர்களுக்கு புரியவில்லையா ? புரிந்திருந்தும் பாமாக எதிர்ப்புணர்வு மட்டும் தான் அவர்களது அறிவுஞீவி மூளைக்கு விளங்குகிறது போலிருக்கிறது.

நிருபமா தன்னுடைய கட்டுரையில் சினிமா பாடல்களில் வரும் ஆபாச வரிகளை ஏன் கண்டு கொள்ள வில்லை என்று கேட்கிறார்
The double standards of this brigade take the breath away. Those spearheading the protests against a statement by the actress Khushboo that a man should not expect virginity in his bride, have never protested against the lewd and suggestive lyrics of Tamil film songs.

தமிழ் பெருங்குடிகள் இதனை பற்றி கொஞ்சம் கவனிக்க வேண்டும். நம் தமிழ் மக்களின் ஞாபக மறதியை கருத்தில் கொண்டு போகிற போக்கில் மாமி அவிழ்த்து விட்டு செல்லும் புளுகு மூட்டை இது. டாக்டர் இராமதாசும், திருமாவளவனும் திரைப்படங்களிலும், பாடல் வரிகளிலும் வரும் ஆபாசங்கள் குறித்து போராட்டம் நடத்திய பொழுது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திரைப்படங்களில் காண்பிக்கலாம் என்றும், அது குறித்து இராமதாஸ் போராட்டம் நடத்த கூடாது என்றும் கூறிய அதே பத்திரிக்கைகள் இன்று அதனை எதிர்க்கலாமே என்று கூறுகிறார்கள்.

அப்புறம் அந்த lewd and suggestive lyrics of Tamil film songsஐ எதிர்த்தால் கவிஞர்கள் உரிமை, தனி மனித எழுத்துரிமை, கற்பனையுரிமை என்று கூறத் தொடங்குவார்கள்.

அப்புறம் இருக்கவே இருக்கு கடைசி அஸ்திரம் - நாட்டில் இது தானா முக்கிய பிரச்சனை ?

ஆம், எங்களூர் கருத்தம்மாவுக்கும், வீரலட்சுமிகளுக்கு டாக்டர் இராமதாசும், திருமாவளவனும் செய்த சேவைகளை கண்டுகொண்டு இவர்கள் பாராட்டு தெரிவித்து விட்டார்கள் ? அல்லது எங்களூர் பிரச்சனைகளை இந்துவின் நடுப்பக்கத்தில் நிருபமா மாமி எழுதி விட்டார் ?

/*

கலாசார போலீஸ்காரர்கள் வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வினால் எனக்கு சந்தோஷமே.

*/

ஐயா... உங்கள் எண்ணம் பலிக்கட்டும், எனது வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்களின் இது போன்ற எண்ணம் தான் எங்களை தொடர்ச்சியாக வெற்றி பெற வைத்து கொண்டிருக்கிறது
----------------------------

கலாச்சாரம் என்பது மாறக்கூடியது தான். குடுமி வைத்த மாமாவும், மடிசார் அணிந்த மாமியும், இன்று கிராப் கட்டிங்குடன் ஜீன்ஸ் பேண்ட் அணிவது போல, கோவணம் அணிந்த படையாச்சி இன்று பேண்ட் போடுவது போல. ஆனால் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் குடும்பம் முக்கியமானது. மேற்கத்திய நாகரிகத்திலும் கூட தன்னுடைய ஆண் நண்பியோ, பெண் நண்பியோ தனக்கே உரிமையாய் இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலானோரின் எண்ணம். யாருடனும் படுத்து விட்டு பிறகு தன்னுடன் வந்து படுக்க வேண்டும் என்று கூறுவதில்லை. இந்தியாவில் அப்படி கூறுவது புரட்சிகரமான கருத்தாக கருதும் போக்கு மும்பையில் தொடங்கி, பெங்களூரில் கிளை விரித்து இன்று சென்னைக்கு எட்டிப் பார்க்கிறது.

இதற்கு முன்பு இந்துவில் ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது.

பெங்களூர் பப்புகளில் ஒரு ஆண் மது அருந்தி கொண்டே ஒரு பெண்ணை நண்பியாக அடையமுடிகிறது. ஆனால் சென்னையில் மது அருந்த டாஸ்மாக் தான் செல்ல முடிகிறது என்ற ரீதியில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. சென்னையில் கொஞ்சமாவது இரவு கொண்டாட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் வாதம்.

பன்னாட்டு நிறுவனங்கள் சென்னைக்கு வருவதால் சென்னையிலும் நைட் கிளப்புகள் தொடங்கலாம் என்பது சரியான வாதம் தானா ? சென்னையின் கடற்கரையோர ரிசார்ட்களும், மகாபலிபுரம் ரிசார்ட்களும் ஏனைய பிற உல்லாசாங்களுக்கும் நவீனமயமான அங்கீகாரம் வழங்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கமாக தெரிகிறது. ஒரு முண்ணனி பத்திரிக்கை, கலாச்சார பத்திரிக்கை, இன்னமும் பஞ்சகட்சங்களும், குடுமிகளும் உலவும் ஒரு அலுவலகத்தில் இருந்து இந்த மாதிரியான கட்டுரை வருவது நிச்சயம் ஒரு மிகப் பெரிய கலாச்சார மாற்றம் தான்.

சமீபத்தில் இங்கிருக்கும் தொலைக்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கடைதிறப்பதால் இந்தியாவில் மாறி வரும் கலாச்சார மாற்றம் குறித்தும் அது இந்தியாவின் குடும்ப வாழ்க்கை முறைக்கு எதிர்காலத்தில் விடுக்கும் சவால் குறித்தும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இன்னமும் பாருக்கு செல்லும் என் வயதுடையோர் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியாமல் தான் போய் விட்டு வருகிறோம். "Bye dady, I am going to Pub" என்றால் செருப்பால் அடி விழும் அல்லது தன் மகன் இப்படி மாறி விட்டானே என்று வேதனைப்படும் பெற்றோர்கள் தான் இங்கு அதிகம்.

அதைத் தான் டாக்டர் இராமதாசும், திருமாவளவனும் பிரதிபலிப்பதாக நான் நினைக்கிறேன்.

Freedom - To what extent ? இது எல்லா நடுத்தர வர்க்க குடும்பத்திலும் இருக்கும் சாதாரண பழக்கம். வீட்டிற்கு சீக்கிரம் செல்வதில் தொடங்கி, அப்பாவிற்கு பயந்து/மரியாதை கொடுத்து ஒழுக்கமாக நடப்பது வரை அது தான் நமது கலாச்சாரம்.

இதனை கலாச்சார காவலர்களாக பார்ப்பது, இராமதாசும், திருமாவளவன் சொல்வதால் ஏற்படுகிற எதிர்வினை தானே தவிர உண்மையான எதிர்வினையாக இருக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை குஷ்பு கூறியதை அதிகம் பொருட்படுத்த தேவையில்லை.

14 comments:

gulf-tamilan said...

"nethiaddi" good article. some (all) brahmin writers in thamizmanam against ramadoss and thiruma.still they are doing the upper caste politics in the media.

குழலி / Kuzhali said...

உங்களுக்கு '-' மீது '-' குத்துகளாக விழ வாழ்த்துகள் :-)

கஞ்சா கருப்பு said...

பத்ரியை பாப்பான் என்று கூறி அவர் கூற வந்ததை திசை திருப்பும் முன்னால் உம்மையே பார்த்துக் கொள்வதுதானே. நீரும் வன்னிய அபிமானத்தில்தானே எழுதுகிறீர்? திருமா இப்போது வன்னியஜாதித் தலைவருக்கு வால் பிடிப்பதால்தானே அவருக்கும் நீர் ஜால்ரா அடிக்கிறீர்?
உமக்கு பின்னூட்ட ஜால்ரா அடிக்கும் குழலியும் வன்னிய வெறியர்தானே? உமக்கெல்லாம் பாப்பானைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை?
வேறு வேலை ஏதாவது பாருங்கள். போய் மரம் வெட்டுங்களேன்.
மூர்த்தி

கொழுவி said...

//பாமாகவும், திருமாவளவனும் எந்தக் கருத்தினை கூறினாலும் மொத்த பத்திரிக்கை உலகின் மடிசாரும், குடிமிகளும் கிளம்பி விடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.//


இது எந்தளவுக்கு உண்மையோ, அதேயளவு உண்மை, ராமதாசும் திருமாவும் கூறியதாலேயே எல்லாம் சரியென்று வாதிடும் சிலரின் பதிவுகள்.
ராமதாஸ் பற்றி எனக்கு எந்தக் கருத்துமில்லை. ஆனால் திருமாவின் மீதிருந்த நம்பிக்கையும் நல்லெண்ணமும் சிதறுண்டு போனதும் திருமாவின் நரித்தனம் (எனக்கு) அம்பலமானதும் இந்தக் குஸ்பு விசயத்தில்தான்.

இம்சை அரசன் said...
This comment has been removed by a blog administrator.
G.Ragavan said...

என்னைக் கேட்டால் ஒன்று சொல்வேன். திருமா-ராமதாஸ் போராட்டத்திற்குப் பிறகுதான் குஷ்பூவின் பேட்டி பற்றியே எனக்குத் தெரிந்தது. இந்தப் போராட்டம் நடத்தவில்லை என்றால் அந்தப் பேட்டி பலருக்குச் சென்றிருக்காது.

ராண்டமின் சொல்வது போல, ஒவ்வொருவரும் அடுத்தவரை வாயடைக்க வைக்க சாதியைப் பயன்படுத்துகின்றார்கள். மிகக் கொடுமையான முயற்சி இது. இதை யாரும் செய்யக் கூடாது. வீரவன்னியன், சாதி அபிமானத்திலிருந்து வெளியே வந்து எழுதுங்கள். இந்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான்.

J said...

folks,
dont waste ur time by posting comments on these junks, his point is only brahmins are against ramados and thiruma but thats not the point. Most of the guys whom i know are really got frustrated with these idiots. Btw vera vanni these guys are not brahmins including me.. mind your words.

--
Jagan

doondu said...

பார்ப்பான் என்று ஏக வசனத்தில் யாரும் பேசினால் செருப்பால் அடிப்போம்.

நாங்கள் ஆதியில் இருந்து பார்ப்பன ரத்தத்தில் ஊறியவர்கள். எங்களால் பழமை விட்டு வெளிவர முடியாது. உங்களால் ஆனதைச் செய்து கொள்ளுங்கள்.

ஜெ. ராம்கி said...

//டாக்டர் இராமதாஸ், நடிகர் ரஜினி காந்த்தை விமர்சித்ததை தவறு என்று வாதிட்ட பத்திரிக்கைகள், அன்றைக்கு இராமதாசின் தனி மனித உரிமையைப் பற்றி யோசிக்காமல் இருந்ததன் மர்மம் புரியாதா நமக்கு ?

I didn't get the point. Which magainze critcized Maaladimai for his critic?! Really interested to know.

குழலி / Kuzhali said...

ராம்கி நீங்க தினமலர் படிக்கவேயில்லையா அந்த சமயத்தில், நக்கீரன் தவிர மற்ற பெரும்பாலான பத்திரிக்கைகள் வாசர்கடிதம்,தலையங்கம் என்ற பெயரில் சவட்டி எடுத்ததை...

வாங்க மூர்த்தி, எப்போ வந்திங்க ஊரிலிருந்து? சுகமா?

யாரும் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமென்பதோ/தோல்வியுறவேண்டுமென்பதோ single agenda வை பொறுத்தது அல்ல. இந்த single agenda எல்லாம் படிக்காத பாமரர்களுக்கு சரி பத்ரி எப்படி single agenda விற்காக தோற்கடிக்கப்பட வேண்டுமென விரும்புகின்றார் என்பது புரியவில்லை, பத்ரி போன்றவர்களே ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்கும்போது என்ன செய்வது.

கலாச்சார ஆயுதங்கள் கை கோளப்படும் போது அதன் முனை மழுக்கப்படுவதும் கூர் தீட்டப்படுவதும் ஆயுதம் யார் கையிலிருக்கின்றது என்பதை பொறுத்து தான் அது தான் இங்கே தற்போது நடந்து கொண்டுள்ளது.

ஜெ. ராம்கி said...

//ராம்கி நீங்க தினமலர் படிக்கவேயில்லையா அந்த சமயத்தில், நக்கீரன் தவிர மற்ற பெரும்பாலான பத்திரிக்கைகள் வாசர்கடிதம்,தலையங்கம் என்ற பெயரில் சவட்டி எடுத்ததை...

There was no magazine including Nakkeeran criticized Ramadoss. Infact, they just boosted up the matter and got him more publicity. Thalayangam is purely the voice of that particular magazine. I've not heard that no thalayangam was written against Ramadoss. Reg. vasagar kaditham, as i've been writing for almost 8 years, defnitely i could say it's not possible. You can see there are punch of letters coming for even a small magazine. Most of the editorial board members come to know the reader's pulse only after going thru the reader's letters. Dinamalar case is exception, Badri has already written about that also. However, we can't make it gerneralilse.

Anonymous said...

குஷ்பு ஒரு கருத்தினை கூறுவது அவரது தனி மனித உரிமை என்றால் டாகடர் இராமதாசும், திருமாவளவனும் தங்கள் எதிர்ப்பினை தெரிவிப்பதும் தனி மனித உரிமை தான்.//

உண்மை தான்.ஆனால் செருப்பையும்,துடைப்பத்தயும் எடுதுக்கொன்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்வதும்,தமிழ்நாட்டை விட்டு ஒடு என்று கர்ஜிப்பதும்,திரைப்படங்களை திறையிட்டால் திரையை கிழிப்போம் என்பதும் தனி மனித உரிமையா?

///நாட்டில் யார் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம். அது இந்திய அரசியல் சாசனம் இந்திய குடிமக்களுக்கு கொடுத்திருக்கும் ஜனநாயக தனிமனித உரிமை. அது தனி மனித உரிமை காவலர்களுக்கு புரியவில்லையா ? புரிந்திருந்தும் பாமாக எதிர்ப்புணர்வு மட்டும் தான் அவர்களது அறிவுஞீவி மூளைக்கு விளங்குகிறது போலிருக்கிறது///


இது உண்மை.யார் வேன்டுமானாலும் வழக்கு தொடரலாம்.ஆனால் அந்த வழக்கு பேச்சுரிமைக்கு எதிராக இருக்கும்போது அந்த வழக்கை கண்டிப்பது ஜனநாயக நாட்டின் ஒவ்வொரு ப்ரஜயின் கடமை.

///இன்னமும் பாருக்கு செல்லும் என் வயதுடையோர் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியாமல் தான் போய் விட்டு வருகிறோம். "Bye dady, I am going to Pub" என்றால் செருப்பால் அடி விழும் அல்லது தன் மகன் இப்படி மாறி விட்டானே என்று வேதனைப்படும் பெற்றோர்கள் தான் இங்கு அதிகம்.அதைத் தான் டாக்டர் இராமதாசும், திருமாவளவனும் பிரதிபலிப்பதாக நான் நினைக்கிறேன்.///

அதை என் அப்பன் அம்மா சொல்லட்டும்.ஏற்கிறேன்,அல்லது எதிற்கிறேன்.வேறு யாரும் சொன்னால் எற்க மாட்டேன்

////மேற்கத்திய நாகரிகத்திலும் கூட தன்னுடைய ஆண் நண்பியோ, பெண் நண்பியோ தனக்கே உரிமையாய் இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலானோரின் எண்ணம். யாருடனும் படுத்து விட்டு பிறகு தன்னுடன் வந்து படுக்க வேண்டும் என்று கூறுவதில்லை. இந்தியாவில் அப்படி கூறுவது புரட்சிகரமான கருத்தாக கருதும் போக்கு மும்பையில் தொடங்கி, பெங்களூரில் கிளை விரித்து இன்று சென்னைக்கு எட்டிப் பார்க்கிறது.///

மேற்கையும் மீறும் புரட்சி கிழக்கில் மலரட்டும்.கிழக்கில் தொடங்கும் புரட்சி உலகம் எங்கும் பரவட்டும்.மக்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள்.///

G.Ragavan said...

// என்னைப் பொறுத்தவரை குஷ்பு கூறியதை அதிகம் பொருட்படுத்த தேவையில்லை. //

இதைத்தான் நான் சொல்கிறேன். கண்டுகொள்ளாமல் விடப்பட வேண்டிய ஒன்றை எல்லாரும் அறியும் படி செய்து விட்டார்கள்.

நீங்கள் வன்முறையைப் பற்றி ஒரு பதிவும் போட்டிருக்கின்றீர்களே. "நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்" என்று சொல்வது வன்முறையில்லையா? கலாச்சாரம் பண்பாடு என்பதெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம். அவைகளைக் காப்பதற்கு அந்த கலாச்சார பண்பாட்டு வழியிலேயே செல்ல வேண்டாமா!

வன்முறை என்பது நீங்கள் பட்டியல் இட்டவைகள் மட்டுமல்ல நீங்கள் பட்டியல் இடாதவைகள் என்பதையும் அறிவீர்கள் என்று நம்புகின்றேன்.

எந்தப் பிரச்சனைக்கும் தீர்வை பாசிட்டிவ்வான நேர்மையான முறையில் அணுக வேண்டும்.

ஒருவர் செய்வது தவறு என்பதால் நாம் செய்யும் தவறு சரியாகி விடாது.

குழலி / Kuzhali said...

//நீங்கள் வன்முறையைப் பற்றி ஒரு பதிவும் போட்டிருக்கின்றீர்களே.
//
ராகவன் வன்முறை பற்றிய பதிவிட்டது நான், வீரவன்னியன் அல்ல, தயவு செய்து தவறான புரிதலையும் கை காட்டுதலையும் செய்யாதீர்கள்.

நன்றி