Sunday, April 03, 2005

நான் RSS எதிர்ப்பாளன் - 2

டோண்டு தன் பதிவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படி நாசிக்களை ஆதரித்தாரோ அது போலத் தான் தாங்களும் நாசிக்களை ஆதரித்ததாக கூறி நோதாஜியுடன் தங்களை இணைத்து கொள்ள முனைகிறார்.

ஆனால் நேதாஜி தன் ஆதரவை நாசிக்களுக்கு தெரிவிக்கும் பொழுது பின் வருமாறு கூறினார்

"It is dreadful, but it must be done. It is our only way out. India must gain her independence, cost what it may. Have you any idea, Mr. and Mrs. Kurti, of the despair, the misery, the humiliation of India? Can you imagine her suffering and indignation? British imperialism there can be just as intolerable as your Nazism here."

From the book K. Kurti, Subhas Chandra Bose as I knew him

இவ்வாறு நாசிக்களின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தாலும், நாசிக்களின் கொள்கை மோசமானது என்று அறிந்திருந்தாலும் இந்திய விடுதலைக்காகவே நேதாஜி அவர்களை ஆதரிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஆனால் சர்வார்காரோ இந்திய விடுதலைக்கும் பாடுபடவில்லை. பிரிட்டிஷாருக்கும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார். அப்புறம் என்ன இந்திய நலனுக்காக ஆதரித்தார் என்று பேச்சு என்பது தான் விளங்கவில்லை.
சர்வார்கார் பெரும்பான்மையாக உள்ள மக்கள் சர்வாதிகாரிகளாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். அந்த வகையில் நாசிக்கள் யூதர்களை ஜெர்மனியை விட்டு துரத்தியதையும் ஆதரித்தவர். அவர் வழி வந்த கூட்டம் தான் இப்பொழுது இஸ்ரேலை ஆதரிப்பதாக கூறிக் கொள்கிறது.

ஜெர்மனியில் நாசிக்கள் யூதர்களை விரட்டியடித்தது போல முஸ்லீம்களை இந்தியாவை விட்டு வெளியேற்றி இந்து ராஷ்டிரம் அமைத்து விட வேண்டும் என்பது தான் சர்வார்காரின் எண்ணம்.

"A nation is formed by a majority living therein. What did the Jews do in Germany? They being in minority were driven out from Germany."

"The Indian Muslims are on the whole more inclined to identify themselves and their interests with Muslims outside India than Hindus who live next door, like Jews in Germany."

ஆக நாசிக்கள் உயர்வாக இருக்கும் பொழுது நாசிக்களுக்கு ஆதரவு, இஸ்ரேல் இன்று அதிகார பீடமாக இருப்பதால் இஸ்ரேலுக்கு ஆதரவு. இன்று சிங்கள இனவெறி ஆட்சி பீடத்தில் இருப்பதால் அவர்களுக்கும் ஆதரவு

சர்வார்கார் காந்தியாரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய குழுவில் முக்கியமானவர். இந்த கொலை வழக்கின் பின்னனியை விசாரித்த கபூர் கமிஷன் சர்வார்காருக்கும் கோட்சேவுக்கும் உள்ள தொடர்பை அமபலப்படுத்தினாலும் இதனுடைய விபரங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

அது போலவே காந்தியாரை கொன்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு வேறு யாரும் இந்த படுகொலையில் சம்பந்தப்படவில்லை என்று கோட்சே அளித்த வாக்குமூலமும் சர்வார்காரை தப்பிக்க வைத்தது.

கோட்சேவின் குரு சர்வார்கார் தான் என்பதும் இந்த படுகொலைக்கு முன்பாக 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 17 தேதிகளில் கோட்சேவும் சர்வார்கரும் சந்தித்தார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்த உண்மை

துகிலுரிக்கும் பதிவுகள் தொடரும்

4 comments:

Thangamani said...

தொடருங்கள்! நன்று!!

-L-L-D-a-s-u said...

காந்தியார் கொலையில் இவர்களின் பங்களிப்பை துகிழுரிபதற்கு நன்றி..தொடருங்கள்..

அதுசரி.. உங்கள் ராமதாஸும் திருமாவும் காந்தியை திட்டுவதின் நியாயத்தை சொல்லமுடியுமா?

வீரவன்னியன் said...

நன்றி தங்கமணி

தாஸு,

காந்தியார் வர்ணாசிரமத்தை ஆதரித்தார் என்பதாலே தான் எங்களின் எதிர்ப்பு.

தேச தந்தை என்ற வகையிலும், மாபெரும் தலைவர் என்ற வகையிலும் எங்களுக்கு அவர் மீது மரியாதை உண்டு.

dondu(#11168674346665545885) said...

"டோண்டு தன் பதிவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படி நாசிக்களை ஆதரித்தாரோ அது போலத் தான் தாங்களும் நாசிக்களை ஆதரித்ததாக கூறி நோதாஜியுடன் தங்களை இணைத்து கொள்ள முனைகிறார்."
நான் அதைக் கூறவில்லை. பின்னூட்டம் இட்டவர் ஒருவர் கூறியது. அவரும் பார்ப்பனர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடாது எல்லா சாதியினரும் ஆதரித்தனர் என்றுதான் கூறினார். அதை ஒத்துக் கொண்ட ரோஸா அவர்களும் தான் கூற வந்தது வேறு என்றுக் கூறி, அதை விளக்காமல் அப்பால் சென்றார். ரோஸா அவர்கள் பதிவில் அவர் கூற வந்த வேறு விஷயம் என்ன என்று மறுபடியும் கேட்டதற்கு என்னைப் புகழ்வது போலப் பாவனையில் ஏதோ கூறி பதில் கூறுவதைத் தவிர்த்தார்.
நான் இஸ்ரேலை ஆதரிப்பது என்னுடையத் தனிப்பட்ட முடிவு. என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கு நானே பொறுப்பு. நான் நேதாஜி அவர்களின் துணையை நாட ஒரு அவசியமும் இல்லை. ஹிட்லரை நான் ஆதரித்தேன் என்று நீங்கள் நினைத்தால் அது மகா பிதற்றல்.
இது வரை இஸ்ரேலைப் பற்றி மூன்றுப் பதிவுகள் கொடுத்துள்ளேன். தகவல்கள் உண்மையா பொய்யா என்பதைப் பற்றி யாரும் உருப்படியானப் பதிலைக் கூறவில்லை. இப்போது கூட யாரும் அவற்றுக்குப் பின்னூட்டம் இடலாம். நான் படித்ததைத்தான் என் நினைவிலிருந்தே கூறி வருகிறேன். என் நினைவாற்றலைப் பற்றி ஏதாவது சந்தேகம்?
இப்போது விசாகபட்டினத்துக்கு வந்துள்ளேன். என் சகோதரியின் கணினியில் தமிழ் எழுத்துருப் பிரச்சினை. அவள் கணினியில் சுரதாவின் பெட்டியை இறக்கி ஏதோ ஒப்பேற்றுகிறேன். ஊருக்குத் திரும்பியதும் இஸ்ரேலை பற்றி நான்காம் பதிவு வரும். மேலும் அதிகப் பதிவுகள் இஸ்ரேலைப் பற்றி வர இருக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்