Thursday, October 26, 2006

விருத்தாச்சலத்தில் மண்ணைக் கவ்விய விஜயகாந்த்

உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு அவரது சொந்த தொகுதியான விருத்தாச்சலத்தில் பெரும் அடி கிடைத்துள்ளது.

விருத்தாச்சலம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில், 2 வார்டுகளில் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கான 19 கவுன்சிலர்களில் தேமுதிகவிலிருந்து ஒருவர் கூட ஜெயிக்கவில்லை. அந்தத் தொகுதியில் உள்ள கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள 24 வார்டுகளில் 5ல் மட்டுமே தேமுதிகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

கங்கைகொண்டான் பேரூராட்சியில் 2 வார்டிலும், மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 1 வார்டிலும் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் தேமுதிகவுக்கு தோல்வியே கிடைத்தது.

பிறந்த ஊரான மதுரையில் 9 வார்டுகளைக் கைப்பற்றி திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் மண்ணைக் கவ்வியுள்ளார்.


நன்றி :

2 comments:

BadNewsIndia said...

வீரவன்னியன், நேற்று முளைத்தவர் விஜயகாந்த்.
அவர் ஒரே ஒரு இடம் மட்டும் ஜெயித்தாலும், அது ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும், மற்றவர்களுக்கும் பெருத்த அடிதான்.

ஆரம்பத்தில் நானும் 'சினிமாக்காரனுக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்' என்று தான் நானும் நினைத்தேன். ஆனால், நடப்பதை பார்த்தால், எல்லாம் நன்மைக்கே என்று தான் தோன்றுகிறது.

என்ன சொல்றீங்க?

RBGR said...

நடந்த வன்முறை சூறாவளியில் அ.தி.மு.க. வே ஆட்டம் காண இவர்கள் எம்மாத்திரம்..

ஆனால்,இது ஏதோ பழைய கோபத்தைத் தணிக்கப் போட்டப்பதிவாய் தோன்றுகிறது.
நடுநிலையாய் சொல்லுங்க...உண்மையாகவே நடந்தது தேர்தலா..இல்லை கூட்டணிக்கு காட்டவிழைந்த பலப்பரீட்சையா..

பரீட்சை என்பதைவிட சும்மா வீடு கட்டி அடித்தார்கள் எனலாம்(அதாவது வெத்து சத்தம் இந்த தேர்தல் என்கிறேன்).

தேர்தல் என்ற முறையே ஜனநாயகத்தில் கேலிக்கூத்தான பின்பு..

மரத்தை வெட்டியவர்களே பசுமை புரட்சி நடத்தும் போது....

விஜயகாந்த் போன்ற முதுகெலும்பு கொண்டவர்களை என்போன்றோர் பாரட்டத் தான் வேண்டி உள்ளது.