Friday, October 20, 2006

தீபாவளி என்னும் முட்டாள்தனம்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

  • ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்
  • தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்
  • விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
  • ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது
  • அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது
  • அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்
  • தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்
  • விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்
  • இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்
  • இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?


இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.

இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?

தந்தை பெரியார் தீபாவளி என்ற பண்டிகை பற்றி கூறியதன் சிறு தொகுப்பு



நன்றி


4 comments:

Sivabalan said...

//சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! //


சிந்தனையை தூண்டும் பதிவு

BadNewsIndia said...

ஆஹா, என்னங்க இப்படியெல்லாம் யோசிச்சு சொல்லி இருக்காரா பெரியாரு?
சும்மா, யாரோ சொன்னத, அவர் பேர்ல போட்டிருப்பாங்க வீரவன்னியன் சார்.

நரஹாசுரன் திராவிடனா? அப்ப விஷ்ணு வெள்ளைக்காரரா?

என்னங்க இது? எல்லாத்துக்கும் லாஜிக் தேடினா எப்படி.

தீபாவளின்றது எவ்ளோ சந்தோஷமான விஷயம், அதை போய் வேணாம் என்கிறீர்களே.

இருக்கரவன் நெறைய பட்டாசும், இல்லாதவன், சின்ன ஊசிப் பட்டாசாவது வெடிச்சு சந்தோஷமா இருக்கர நாள் இத விட்டா வேற எங்க இருக்கு?

இப்ப கொஞ்ச வருஷமாத்தான், எவனும் பட்டாச வெடிக்காம, சூரியன்/ஜெயா டி.வி பாத்துட்டு, வீட்ல மொடங்கி கெடக்கறாங்க.

பண்ணி, பூமி, கடல், நரஹாசுரன் எல்லாத்துக்கும் பின்னால ஒரு காரணம் இருக்குங்க, அத கேட்டு தெரிஞ்சுக்கங்க.

கண்டிப்பா, அது நரஹாசுரன் திராவிடன், அதனால தீபாவளின்ற மாதிரி கீழ் தரமா இருக்காது.

ஹலோ, யாராவது விவரம் தெரிஞ்சவங்க எடுத்து சொல்லுங்க இவருக்கு.

தீபாவளி வாழ்த்துக்கள்!

PRABHU RAJADURAI said...

மகாவீரரின் பிறந்தநாள் என்று கூட கூறுகிறார்களே?

dondu(#11168674346665545885) said...

எந்தப் பண்டிகையாக இருந்தாலும் சந்தோஷமாகக் கொண்டாடுகிறோமா என்று பார்ப்பதுதான் முக்கியம். அந்த விஷயத்தில் தீபாவளி ஒரு சந்தோஷப் பண்டிகையே. இந்தியாவில் மத வேற்றுமையின்றி பாவிக்கப்படும் பண்டிகைகளில் அதுவும் ஒன்றே.

அப்புறம், சிறு வயதில் தங்கள் குடும்பத்தினர் நவராத்திரி கொலு வைக்க முடியாமல் போனதற்காக தமிழ்மணத்தில் ஒரு வலைப்பதிவர் ரொம்ப ஃபீலிங்ஸா (நிஜமாகவே) சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அவர் இப்போது தீபாவளி பற்றி என்ன கூற ஆசைப்படுவார்?

இதற்குக் கூட அவர் பெரியாரைத்தான் கூப்பிடுவாராமா. பெரியாரே அவ்வாறு நடந்து கொள்ளவேண்டாம் என்று கூறியதாகத்தானே ஞாபகம்!

அன்புடன்,
டோண்டு ராகவன்