Friday, October 27, 2006

தேன்கூடு, திண்ணை நடுநிலை இதழ்களா ?

ரவி ஸ்ரீநிவாஸ் குறித்த கேள்வியை நான் எழுப்பிய பொழுதே அவரின் இரட்டை வேடத்தை துகிலூரித்து பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து, தனிப்பட்ட தாக்குதலாக இருக்கும் என்று எண்ணி விட்டு விட்டேன். இப்பொழுது நீங்கள் :-) (மற்றொரு தயிர்சாதம் பதிவு எழுதியிருக்கிறது, பூங்காவின் சார்பு குறித்து).

பூங்காவின் சார்பு, தமிழ்மணத்தின் சார்பு போன்றவை குறித்து கேள்வி எழுப்புபவர்கள் தேன்கூடு, திண்ணை, தமிழோவியம் போன்ற இதழ்களின் சார்பு குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை ? தமிழ்மணத்தில் சில பதிவுகள் நீக்கப்பட்டதற்கு எழுந்த பெரிய கூக்குரல், ஈழப் பதிவர்களை தேன்கூட்டில் அனுமதிக்காதது குறித்து ஏன் எழவில்லை ? திண்ணையில் தயிர்சாதங்களின் கட்டுரைகளே வெளிவந்து கொண்டிருக்கும் பொழுது, அங்கு அதன் சார்பு குறித்து கேள்வி எழுப்பாத ரவி ஸ்ரீநிவாஸ் மற்றும் பிற தயிர்சாத கோஷ்டிகள் தமிழ்மணம்/பூங்காவில் மட்டும் சார்பு வாதத்தை தூக்கிக் கொண்டு ஓடி வருவது எதனால் ?

இவையெல்லாம் என் கேள்விகள் மட்டும் அல்ல, என்னைப் போன்ற பல வலைப்பதிவாளர்களின் கேள்விகள். பல தரப்பட்ட பதிவுகளின் குரல்கள் ஒலிப்பதை விரும்பாத சில மேல்சாதி கொழுந்துகள் இவ்வாறு தங்கள் எரிச்சலை கேள்விகள் மூலம் தணித்து கொள்கிறார்கள் என்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன்

- இது பூங்கா குறித்து எழுதப்பட்ட இந்தப் பதிவில் நான் பின்னூட்டமாக எழுதியது. பின்னூட்டம் எழுதி பல மணி நேராங்களுக்குப் பிறகும் அந்தப் பின்னூட்டம் வெளிவரவில்லை. ஆனால் பல அனானிமஸ் பின்னூட்டங்கள் வெளிவந்து விட்டன. இதில் இருந்து அந்தப் பதிவு எழுதியவரின் உள்நோக்கமும், புத்தியும் புரிகிறது.

என்னுடைய பின்னூட்டத்தை அனுமதிக்காததால் தான் தனிப்பதிவாக எழுத நேரிட்டது.

அது சரி.. தேன்கூட்டை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யார் ? அவர்களின் சார்பு என்ன ?

2 comments:

bala said...

//அது சரி.. தேன்கூட்டை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யார் ? அவர்களின் சார்பு என்ன ?//

தெரியவில்லை. அவர்கள் எந்த ஆதிக்க சக்தியை சேர்ந்தவர்கள் என்பது ஒருவேளை நம்ம அசுரன் அண்ணாவிற்கு தெரிந்திருக்கலாம்..
அவருக்கு, சட்டையை கிழித்து ,முதுகில் என்ன முத்திரை குத்தப்பட்டுள்ளது என்பதை படிப்பது ஒரு கைவந்த கலை.

பாலா

SnackDragon said...

தல கலக்கீட்டீங்க, ஓகை காலி? களவாணிப்பய பின்னூட்ட‌த்தை அனுமதிக்கலை பாத்தீங்களா?

SridarBalaji