இடஒதுக்கீடு என்றாலே திறமை பிரச்சனை வந்து விடுகிறது. திறமை குறைச்சலா இருக்கிறவங்க இடஒதுக்கீடு மூலமா உள்ள நுழைஞ்சிடறாங்க அப்படின்னுட்டு சில அறிவுஞீவிங்க சொல்றாங்க. ஏதோ உலகத்துலேயே அறிவிஞீவியா இருக்கிறவங்க இவங்க மட்டும் தான்னு ஒரு நினைப்பு இவங்களுக்கு. இவங்களுக்கு மட்டும் தான் அந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதன் மூளையை வைச்சான், மத்தவங்களுக்கு எல்லாம் களி மண்ணத் தான் வைச்சான் போல பேசுறாங்க.
நம்ம சினிமா உலக அறிவு ஞீவி ஒருத்தர் இருக்காறே, ஒரு பையன் ஒரு வயசான அம்மாவை காதலிக்க, அந்த வயசான அம்மாவோட பொண்ணு பையனோட அப்பாவை காதலிக்க, ஒரு அற்புதமான காதல் ஓவியத்தை எடுத்தாறே அந்த அறிவுஞீவி தான். நேரடியா மோதாம, முதலியார் புள்ளைக்கு இடஒதுக்கீடால சீட் கிடைக்கல அப்படின்னுட்டு படத்துல பிட் ஓட்டுவாரு.
அப்புறம் வந்தாரு ஒருத்தர், ஜெண்டில்மேன்னு படம் எடுத்தாரு. அந்தப் படத்த பாத்தீங்கன்னா, நோட்டீஸ் போர்ட்ல மெடிக்கல் காலேஜ் ரிசல்ட் ஒட்டியிருப்பாங்க. கறுப்பா இருக்கற பசங்கள்லாம் ரிசல்ட பாத்து சந்தோஷமா குதிப்பாங்க. வெள்ளையா, சுண்டினா ரத்தம் வர்ற கலர்ல இருக்கறவருக்கு சீட்டு கிடைக்காது. என்ன சொல்லவர்றாங்கன்னு புரியுதா...
நம்ம ஆளுங்க நிறையப் பேரு இத பாக்கறதுல்ல, மதுபாலா தொப்புள்ல அர்சுனன்னு வாள்வைக்கறத தான் பார்பாங்க. அப்புறம் அவருக்கு ஒருத்தர் அட்வைஸ் வேற பண்ணுவாரு. சத்ரியனா இருக்காதே, சாணக்கியனா இரு அப்படின்னுட்டு. நாம எல்லாம்சத்ரியன்/சூத்ரன் - மூளை இல்லாதவங்க. இவங்க சாணக்கியன் - மூளை இருக்கறவங்க.
பிரச்சனைக்கு வந்திடலாமா..
90% க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இருந்துஇப்பொழுது தான் முதல் தலைமுறை பட்டதாரிகள் வெளிவந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர்கள் கிராமத்து இளைஞர்கள். இவர்களுடைய குடும்பத்தில் உள்ள பலர் படிப்பறிவில்லாதவர்கள். தாங்கள் படிக்கா விட்டாலும் பரவாயில்லை. நம்மகன்/மகளாவது படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நிறையப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.
ஆனால் முற்படுத்தப்பட்ட பிராமண குடும்பங்களில் இருக்கும் நிலைமையே வேறு. ஆங்கிலேயர் காலத்திலேயே அவர்களுக்கு சேவகம் செஞ்சு, திவான்களா இருந்து, கைக்கூப்பி இங்கிலிப்பிச்சு கத்துக் கிட்டாங்க. காலத்துக்கு ஏத்த மாதிரிமாறக் கூடிய ஒரே தகுதி இவங்களுக்குத் தான். நம்ம ஆளுங்கல்லாம், கொடி தூக்கிவெள்ளைக்காரன்கிட்ட அடி வாங்கனப்ப இவங்க சொகுசா திவானா இருந்து இங்கிலிப்பிச்சு கத்துக்கிட்டாங்க. இவங்க தாத்தா, பாட்டி எல்லாம் இங்கிலிபிச்சு பேசற கதை இதுதான். இவங்க எல்லா பிரிவுலேயும் இருப்பாங்க. பி.ஜே.பி யும் இவங்க தான்,காங்கிரஸ்சும் இவங்க தான், கம்யுணிஸ்டும் இவங்க தான். நம்ம இந்து ராம் கம்யுணிஸ்டு, ஆனா சங்கராச்சாரியாரை தமிழக எல்லை வரைக்கும் போய் வரவேற்பாரு. இதுமாதிரி நிறைய கூத்து இருக்கு.
அதை விடுங்க.விஷயம் என்னான்னா...
பலத் தலைமுறைகளா பிராமணர்கள் படிப்பறிவுடன் இருக்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களில் இப்பொழுது தான் முதல்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் படிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.ஒரு படித்த குடுமபத்தில் இருந்து ஒருவன் பட்டதாரியாவது சுலபம். ஆனால் படிப்பறிவே இல்லாத குடும்பத்தில் இருந்து வெளிவரும் இளைஞர்கள் படும் பாடு ரொம்ப கொடுமை. நான் அனுபவப்பட்டுள்ளேன். வழிக் காட்டுவதற்கு ஆளே இருக்க மாட்டார்கள். நாமாக முட்டி மோதி விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். பல சமயங்களில் லேட்டாகத் தான் விஷயங்கள் தெரிய வரும். சில முறை தவறாக நடந்து நொந்துப் போய், அடுத்த முறை அதைச் சரி செய்துள்ளேன். வசதியான குடும்பத்தில் இருந்தால் கூட இது தான் நிலைமை.
இதுவே வசதியே இல்லாத குடும்பமாக இருந்தால்... அவன் பாடு இதை விடக் கொடுமை. வயிற்றுப் பாடு ஒரு புறம், படிக்க வேண்டும் என்ற ஆவல் ஒரு புறம். கிராமத்துபள்ளிகளில் கிடைக்கும் அற்புதமானக் கல்வி ஒரு புறம் என்று அவன் படும் இன்னல்கள் கணக்கிலடங்கா.
இவ்வளவு கொடுமைக்கு இடையிலே அவன் படித்தாலும், அவன் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்றாலும் அவனுக்கு இடஒதுக்கீடு மூலமாக சுலபமாக இடம் கிடைத்து விடுகிறதா என்றால்... நிச்சயமாக இல்லை.. இல்லவே இல்லை.
ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும் கட்-ஆப் மதிப்பெண்களை கவனித்திருப்பீர்கள்.
மருத்துவ படிப்பில் 300/290 எடுத்தவர்களுக்கு கூட மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பதில்லை. அவன் தலித்தாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்டவனாக இருந்தாலும் இடம் கிடைப்பதில்லை. அந்தளவுக்கு இப்பொழுது கடும் போட்டி நிலவுகிறது.
பொதுவான போட்டியில் (OC) 297-298 மதிப்பெண்களில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும். இப்பொழுதெல்லாம் இந்தப் பொதுப் போட்டியில் கூட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நிறையப் பேர் தேர்வு ஆகிறார்கள் என்பதை கவனியுங்கள். படிப்பு என்பது அவர்களின் சொத்து அல்ல என்பது தெளிவு.
அடுத்து BC, MBC எல்லாம் 295 மதிப்பெண்கள் என்ற நிலையில் நிரப்பப்படுகின்றது. SC என்னும் பொழுதும் இதே நிலை தான்.
ஆக 10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் அனைத்துக் கோட்டாக்களும் நிரப்பப்பட்டுவிடுகின்றன.
10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஒருவனின் திறமை குறைந்து விடுமா ?
பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவன் படும் இன்னல்கள், பல கஷ்டங்களுக்கு இடையேயும்அவன் படித்துப் பெறும் இந்த மதிப்பெண்கள், நெய் சாதமும், பருப்பு சாதமும்சாப்பிட்டு சொகுசாக படிக்கும் பிரமண மாணவர்களை விட பல மடங்கு அதிக வேல்யு உடையது.
திறமை போய் விடும் என்ற கோஷமெல்லாம், இவர்களின் வயித்தெறிச்சல்.
11 comments:
I absolutely agree with this...
Whoever says Government should not consider case and reservation are the same people who divided the fellow humans into different groups based on Birth. These people are the real terrorists...
Now the same group talks about the division is not based on birth but based on profession. That is another way of differentiating people.
My personal opinion is when the society treats fellow human being as just human being and has self respect and mutual respect, then only society will prosper. We are talking about so many ills of western civilization but My opinion is, this western society is the best society. Everybody has self respect and respects other. As one more comment points out that the _globalization_ is one _very_ _good_ thing which should neutralize the whole indian divided society.
I can understand your feelings completely.
Division based on Profession is a crime perpetrated upon the backward and Dalit people. They want us to perform the same task what my father did and don’t want us to come out of that.
Globalization is definitely a shot in the arm for the Dalit and Backward people. We were recognized based on the merits and not based on the caste
If you see the software industry in Indian Companies and US/UK you can notice the difference
In US/UK nowadays we started playing major roles and they return back to India to become mangaers
I couldn't agree more... One of the reason I consider +ve point for staying in US is the absense of these creepy thoughts in the people...
Good writing... Thanks.. Please continue this.
I guess this article refers about K Balachandar. Even though Balachandar has taken few revolutionary(?) cinemas, he was the one who referred Bharathiyar as Bharathiyar Parppan in one movie (name not sure but there were 4 bachelors including Ramya Krishnan).
super generalization...thaakkunga thalaiva!
//
நாம எல்லாம்சத்ரியன்/சூத்ரன் - மூளை இல்லாதவங்க. இவங்க சாணக்கியன் - மூளை இருக்கறவங்க.
//
நீங்கள் குறிப்பிடும் சத்ரியர்களில் பலர், இன்னும் பல கிராமங்களில் தலித்துகளை தீண்டத் தகாதவர்கள் என்று கூறி இன்றும் கேவலம் செய்து வருகிறார்கள். இது நீங்கள் அறிந்தது தான் என நம்புகிறேன். ஆனால், நீங்கள் தலித்துகளை ஆதரிப்பவர் என்பதில் எனக்கு ஐயமில்லை.
//
ஆங்கிலேயர் காலத்திலேயே அவர்களுக்கு சேவகம் செஞ்சு, திவான்களா இருந்து, கைக்கூப்பி இங்கிலிப்பிச்சு கத்துக் கிட்டாங்க. காலத்துக்கு ஏத்த மாதிரிமாறக் கூடிய ஒரே தகுதி இவங்களுக்குத் தான். நம்ம ஆளுங்கல்லாம், கொடி தூக்கிவெள்ளைக்காரன்கிட்ட அடி வாங்கனப்ப இவங்க சொகுசா திவானா இருந்து இங்கிலிப்பிச்சு கத்துக்கிட்டாங்க.
//
இம்மாதிரி ஆட்கள் எல்லா சாதியினரிலும் உள்ளார்கள் என்பது தான் உண்மை! ஒரு சாராரை தாக்குவது நியாயம் அல்ல. என்னவோ உங்கள் ஆட்கள் தான் சுதந்திரம் வாங்கித் தந்தது போன்ற பொருள்படுவது போல் கூறுவதும் சரியானது அல்ல. பாரதியார், ராஜாஜி போன்ற பல பிராமணர்கள் சுதந்திரத்துக்கு பாடுபட்டார்கள் அல்லவா? முற்படுத்தப்பட்டவர் என்பதில், வ.வு.சி, சுப்பிரமணியம் சிவா, வாஞ்சிநாதன் போல இன்னும் பல உதாரணங்களை முன் வைக்கலாம். எதையும் generalize செய்து எழுதுவது ஆபத்தானது, தவறானதும் கூட! ஆங்கிலேயர் ஆட்சியில் பணியாற்றிய போலீசார் அனைவரும் பிராமணர் என்று கூற மாட்டீர்கள் என நம்புகிறேன் :-0
//மருத்துவ படிப்பில் 300/290 எடுத்தவர்களுக்கு கூட மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பதில்லை. அவன் தலித்தாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்டவனாக இருந்தாலும் இடம் கிடைப்பதில்லை. அந்தளவுக்கு இப்பொழுது கடும் போட்டி நிலவுகிறது.
//
ஆக 10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் அனைத்துக் கோட்டாக்களும் நிரப்பப்பட்டுவிடுகின்றன.
10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஒருவனின் திறமை குறைந்து விடுமா ?
//
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட மக்களும் சிறப்பாக படிக்கிறார்கள், முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். கல்வி நிலையில் / திறமையில் முற்பட்டோருக்கும் பிறருக்கும் உள்ள வித்தியாசம் வெகுவாக குறைந்து விட்டது, இடஒதுக்கீட்டின் வெற்றி என்று கொள்ளலாம். ஆனால், தலித் மற்றும் பிற்பட்டோரில் ஒரு சாராரே இடஒதுக்கீட்டின் பெரும்பான்மையான பயன்களை அனுபவித்து வருகிறார்கள் என்பது திருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம் என்பது என் கருத்து. இதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்!
//
நெய் சாதமும், பருப்பு சாதமும்சாப்பிட்டு சொகுசாக படிக்கும் பிரமண மாணவர்களை விட பல மடங்கு அதிக வேல்யு உடையது.
//
நீங்கள் கூறும் மற்றொரு generalization-ஆன இது மிகவும் அபத்தமானது! பிராமணர்களிலும் பல ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பருப்பு/நெய் சாதங்கள் கிடைப்பதில்லை! கிடைத்ததை உண்டு, தாய் தந்தையரின் கஷ்டங்களை உணர்ந்து, அயராது உழைத்து, நன்கு படித்து முன்னுக்கு வந்த பல பிராமண மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன். தற்போது, அவர்களது தாய் தந்தையரையும் நல்ல நிலைமையில் வைத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்
பாலா
ஐடியா ஐயரின் 5 யோசனைகள்:
1. விமானங்களில் இட ஒதுக்கீடு
2. தலித் பையன்க எல்லாரும் ஐயர் வீட்டு பொண்ணா பார்த்து கலியாணம்
3. ப்ரொகிராம் எழுதுற எல்லாருக்கும் வெள்ளை பெயிண்ட்
4. இனிமேல் சாப்ட்வேர் வேலை எல்லாத்தையும் தலித் மற்றும் மருத்துவர் ஐயா சமுகத்துக்கு
5. இனிமே அய்யமாருங்கள வயல் வேலை மட்டுந்தான்.
முதல்ல நீங்க உங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மைய விட்டு வெளில வாங்க ஐயா.
ஐடியா அய்யர் அவர்களே,
உங்க ஐடியாவுக்கு ரொம்ப நன்றி, கூடிய விரையில் எங்கள் மத்திய அமைச்சர்கள் மூலமாக இதனை நடைமுறைக்கு கொண்டு வர பரீசீலனைச் செய்கிறோம்
மற்றது முடியாவிட்டாலும், 5வது ஐடியாவை எப்பாடு பட்டாவது நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிப்போம், உங்களுக்கே அந்த முதல் வாய்ப்பையும் தருவோம் என்பதை இத் தருணத்தில் சொல்லிக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
அப்படியே வயல் வெளியில் Personality development வகுப்புகளையும் தாங்களே எங்களுக்கு கற்றுத் தரவும் ஆணை பிறப்பிப்போம்
நன்றி
//தலித் மற்றும் பிற்பட்டோரில் ஒரு சாராரே இடஒதுக்கீட்டின் பெரும்பான்மையான பயன்களை அனுபவித்து வருகிறார்கள் /
இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவிப்பவர்களின் பெரும்பாலோர் , அதனை அனுபவித்து முன்னேரியோரின் வாரிசுகள்தாம் . பிற்பட்டோரின் , வாய்ப்புகளை தட்டி பறிப்பது அவர்கள்தான் .
ஒரு தலைமுறையில் பயனை அனுப்வத்தின் குடுமப்த்தினற்கு இட ஒதுக்கீடு மறுக்கபபடவேண்டும் .
பாலா, தாஸ்,
உங்கள் வாதம் விவாதத்திற்குரியது. இடஒதுக்கீடு என்றைக்குமே எங்களுக்கு வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன்
பாலா,
அப்புறம், பாரதியார் பார்ப்பனர் இல்லைங்க..அவரே பார்ப்பானை ஐயர் என்ற காலம் போச்சே அப்படின்னு தானே பாடினார். அது தவிர இங்கு நான் சொல்ல முற்படுவதெல்லாம் பார்பனியத்தை முன்னிறுத்துபவர்களைத் தான்
Post a Comment