Sunday, February 27, 2005

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில்ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேட்டிருக்கிறார். அவ்வளவு தான். கருணாநிதிக்கு கோபம் வந்து விட்டது. தங்களது கட்சியின் எம்.பி.கள் கூட்டத்தை கூட்டி விட்டார். சோனியா, மன்மோகன் என எல்லோரும் அவரை சமாதானப்படுத்த, கொஞ்ம் அடங்கியிருக்கிறார்.

கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு நல்லதா, கெட்டதா என்று முடிவெடுப்பதற்கு முன்பாக, தமிழகத்தில் ஒரு கட்சி கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியுமா என்று ஆராய வேண்டும். நிச்சயமாக முடியாது. தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடையாது. ஆனால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஓட்டு வங்கி இருக்கிறது. காங்கிரசுக்கும் இருக்கிறது. திராவிடக் கட்சிகள் காங்கிரசின் இந்தஓட்டு வங்கி மூலமாக மாறி மாறி வெற்றி பெற்று வந்திருக்கின்றன. காங்கிரஸ் மேல்சவாரி செய்து தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டன.

தி.மு.க.வின் ஓட்டு வங்கி மாநிலமெங்கும் பரவலாக இருந்தாலும், ஒரு மாவட்டம் முழுமையிலும் வெற்றி பெரும் அளவுக்கு இருக்கிறதா என்றால்..நிச்சயமாக இல்லை. தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு திமுக வை விட பலம் அதிகம். வட மாவட்டங்கள்திமுக வின் பலம் என்று சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை. வட மாவட்டங்களில் மூன்றுபலமானக் கட்சிகள் இருக்கின்றன என்றுச் சொல்லலாம். திமுக, பா.ம.க, விடுதலைச்சிறுத்தைகள் தான் அந்தக் கட்சிகள். அதிமுக, காங்கிரஸ் போன்றவற்றுக்கு ஒரளவுக்குச் செல்வாக்கு உண்டு.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக விடுதலைச் சிறுத்தைகளுடன் சவாரி செய்துவடமாவட்டங்களில் சிலத் தொகுதிகளை கைப்பற்றிக் கொண்டது. இந்த பாரளுமன்ற தேர்தலில் பா.ம.க வுடன் சவாரி செய்து மறுபடியும் கணிசமானத் தொகுதிகளைகைப்பற்றிக் கொண்டது.

வடமாவட்டத்தைப் பொறுத்தவரை பா.ம.க வும், விடுதலைச் சிறுத்தைகளும் தவிர்க்கமுடியாத கட்சிகள். ஒரு சிறு உதாரணம், சிதம்பரம் பாரளுமன்ற தொகுதி.

கடந்த தேர்தலில் திருமாவளவன் தனித்து நின்று 2.5 லட்சம் ஓட்டுகளைப் பெற்றார்.பா.ம.க 3.4 லட்சம் ஒட்டுகளைப் பெற்றது. பா.ம.க. தனித்து போட்டியிட்ட பொழுது 2லட்சம் ஓட்டுகளைப் பெற்றதை ஒப்பிடும் பொழுது திமுக வுடன் கூட்டு சேர்ததால் பா.ம.க வுக்கு கிடைத்த லாபம் 1.4 லட்சம் ஓட்டுகள். ரஜினியின் "பலமான (?)"ஆதரவுடன் களத்தில் நின்ற பா.ஜ.க, அதிமுக வின் ஓட்டுக்களான 1 லட்சத்தை பெற்றது. டெபாசிட்டும் காலி.

ஆக வட மாவட்டங்களில் வெற்றியை நிர்ணயம் செய்வது பா.ம.க வும் விடுதலைச்சிறுத்தைகளும் தான். இதனை அலசி ஆரய்ந்தப் பிறகு தான் டாக்டர் ராமதாசும்திருமாவளவனும் இணைந்திருக்கிறார்கள். வடமாவட்டங்களில் இவர்கள் இருவரும் கூட்டணிஅமைக்கும் பட்சத்தில் அது வலுவாக இருக்கும். அதே சமயத்தில் தனித்துநிற்பதெல்லாம் சிக்கலாகி விடும். எல்லா தொகுதிகளும் சிதம்பரம், தருமபுரி போலஅமைந்து விடாது. அதனால் திமுக, அதிமுக என ஏதாவது ஒரு அணியில் தொற்றிக் கொள்வது.நிறைய இடங்களை வாங்குவது. ஏற்கனவே மத்தியில் கூட்டணி அரசின் அங்கம் வகிப்பதால்மாநிலத்திலும் அதையே பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் டாக்டர் ராமதாசுக்கு உண்டு.கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பல வருடங்களாக கேட்டுக் கொண்டும்இருக்கிறார். இளங்கோவனும் அதையே கேட்க கருணாநிதிக்கு போபம் வந்து விட்டது.

ஏற்கனவே டாக்டர் ராமதாஸ்-திருமாவளவன் இணைப்பு கருணாநிதிக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சென்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க. 27இடங்களில் போட்டியிட்டது. இப்பொழுது 30க்கும் மேற்பட்ட இடங்களைக் கேட்க கூடும்.திருமாவளவன் குறைந்தது 15 இடங்களையாவது கேட்பார். அல்லது இருவரும் சேர்ந்து 50இடங்களைக் கேட்க கூடும். ஆட்சியில் பங்கு என்பதையும் முன்வைக்க கூடும். எனவேமுளையிலேயே கிள்ளி ஏறிய எம்.பி.கள் அவசர கூட்டம், மத்திய அரசில் இருந்து விலகஆலோசனையோ என்று நினைக்கும்படி ஒரு ஸ்டண்ட் அடித்தார்.

ஆட்சியைப் பிடிக்க கூட்டணி வேண்டும் ஆனால் அதற்கு உதவி செய்தக் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரமாட்டேன் என்பது தான் கருணாநிதியின் நீதியா ?

கூட்டணி இல்லாமல் தனித்து நின்று தனியாக ஆட்சி அமைக்கலாமே ?

19 comments:

Unknown said...

வீரவன்னியன், ஆதிமுக அல்லது திமுகவிற்கு ஆட்சி அமைக்க பாமக, விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் இன்னும் இருக்கும் சில சில்லூண்டி கட்சிகளின் ஆதரவு இருந்தால் போதும். காங்கிரஸின் ஆதரவு இல்லாமலே இந்த இரண்டு கட்சிகளாலும் பெரும்பான்மை காட்ட முடியும். அப்படி இருக்க ஆட்சியில் காங்கிரஸ் எந்த விதத்தில் பங்கு கேட்க முடியும்.

கூட்டணி ஆட்சியோ தனித்து ஆட்சியோ, ஆசைகளை மட்டும் காங்கிரஸ் வளர்த்துக்கொண்டால் போதாது. அதற்கான வலிமையையும் கூட்டிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலத்திற்கும் காமராஜர் ஆட்சியை கனவில் மட்டுமே காண முடியும்.

Anonymous said...

ஆட்சியில் பங்கு கேட்கப்போவதில்லை என்பதை ராமதாஸ் பலமுறை தெளிவு படுத்தியிருக்கிறார். அண்மையில் சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் மீண்டும் அதைச் சொல்ல அது பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகளும் பா.ம.கவும் ஒரே அணியில் இருப்பதால் அவர்களது அரசியல் பலம் கூடுமா அல்லது அவர்களுக்கே பாதிப்பு ஏற்படுமா என்பது இதுவரைக்கும் விடைகாணமுடியாத கேள்வி. தலைமையில் ஏற்பட்டிருக்கிற இணைப்பு அடிமட்டத்தில் ஏற்பட்டிருக்கிறதா என்பது ஒரு பெரிய கேள்வி. சாதி உணர்வுகள் அரசியல் விசுவாசங்களை விட ஆழமானவை என்பதை இதற்கு முன் தமிழக அரசியல் காட்டியிருக்கிறது.பெரும்பாலும் சாதி அடிப்ப்டையில் ஆதரவு கொண்ட, கிராமப்புறங்களில் அதிகம் செல்வாக்குக் கொண்ட கட்சிகள் பா.ம.கவும், வி.சிக்களும். அங்கு சாதியைத் தாண்டிய அரசியல் விசுவாசம் ஏற்படுமா என்ப்தையும் பார்க்க வேண்டும்.
இளங்கோவன் கருணாநிதியை ஜாதியைச் சொல்லி ஏசியதுதான் மனக்கசப்புகளுக்கு காரணம்.இளங்கோவனின் கூட்டணிப் பேச்சுக்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அவரது செயல்பாடு காரணமாகவும், வாசனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதற்காகவும் அவர் அமைச்சரவையிலிருந்து கழட்டி விடப்படுவார் என்று ஒரு செய்தி உலவியது. அவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள தொண்டர்களை உசுப்பி கவனத்தைத் திசைதிருப்புகிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்போது பதவி போனாலும் கருணாநிதியை எதிர்த்தேன் பதவி போய்விட்டது என்று சொல்லி தொண்டர்களின் அனுதாபத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லவா?

Shankar said...

>>ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஓட்டு வங்கி இருக்கிறது. காங்கிரசுக்கும் இருக்கிறது. திராவிடக் கட்சிகள் காங்கிரசின் இந்தஓட்டு வங்கி மூலமாக மாறி மாறி வெற்றி பெற்று வந்திருக்கின்றன. காங்கிரஸ் மேல்சவாரி செய்து தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டன.

:))) perusa sirikkira maadhiri smiley edhuvum illiya unga kitta?
maRRapadi, suvaarasiyamaana padhivu vanniyare.

Anonymous said...

You argument is not correct one. See all these are power play and it all depends on how much they have negotiating power. Nobody obstructs Cong or Ramadoss to contest alone. They know their strength and that's why they are with either DMK or AIADMK. When they feel they have enough strenght, they will contest alone and will capture the government. This is like open market and whoever has more power (negotiating power/people support) will have more pie (whole pie) in the government.

Anonymous said...

super படையாச்சியாரே!

Anonymous said...

I enjoyed reading your writeup.
Didnt DMK get a representation
in the central government with
50 MP seats? What is wrong in Cong
or PMK demanding a coalition govt
in the state govt?

Generally only 50% of the people
vote in any election. The rest are scared to come the polling booth fearing violence.
If they can be persuaded to come out and vote safely, a cong/pmk
coalition can capture power !

Kasi Arumugam said...

Generally only 50% of the people
vote in any election. The rest are scared to come the polling booth fearing violence.
முதல் பாதி உண்மை. இரண்டாவது இல்லை. நமக்கு என்றுமே அபிப்ராயங்களை ஏற்படுத்துவதில், பங்கெடுப்பதில் நம்பிக்கையில்லை. எட்டி நின்று விமர்சிப்பது சுகமானது. வன்முறைக்குப் பயந்து ஓட்டுப்போடுவதில்லை என்பது மிகமிக மிகைப்படுத்தப்பட்ட ஒன்று.

Unknown said...

//I enjoyed reading your writeup.
Didnt DMK get a representation
in the central government with
50 MP seats? What is wrong in Cong
or PMK demanding a coalition govt
in the state govt?//

உரிமை என்பது எல்லோருக்கும் இருக்கிறது. கேட்கும் உரிமை காங்கிரஸுக்கு உள்ளது போலவே மறுக்கும் உரிமை திமுகவுக்கும் இருக்கிறது.

//Generally only 50% of the people
vote in any election. The rest are scared to come the polling booth fearing violence.//

நல்ல ஜோக் அல்லது கற்பனை. மீதமுள்ள 50% பயத்தால் ஓட்டுப் போட வருவதில்லை என்பது நம்பமுடியாத வாதம்.

ஜெ. ராம்கி said...

மாலடிமை - திருமா கூட்டணி என்பது மேடையில் மட்டும்தான். தனித்து நின்றால் என்.எஸ்.சி ஏரியாவை மிரட்ட மட்டுமே இவர்களால் முடியும்... இருபது தொகுதிக்கு மேல் பாமகவுக்கு அறிவாலயத்தில் தரமாட்டார்கள். கூட்டணியில் கேட்டது கிடைக்காவிட்டால் என்ன செய்வார்கள்? வழக்கம்போல போயஸ்கார்டன் சலோ! அங்கே நாப்பது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நாப்பதில் இருபது ஜெயிப்பதே பெரிய விஷயம். இருபது சீட்டை வைத்துக்கொண்டு சட்டமன்றத்தில் என்ன செய்ய முடியும்? இதெல்லாம் தேவையில்லாத விஷயம். பாராளுமன்ற தேர்தல் வந்தால் பெரிய கட்சிகளை மிரட்டி, ஆறு தொகுதி வாங்கி மூணு பேரை அமைச்சராக்கி தைலாபுர தோட்டத்தை விரிவாக்கும் வேலையோடு நிறுத்திக்கொள்வது மாலடிமைக்கு நல்லது.

வீரவன்னியன் said...

ஷங்கர், கே.வி.ஆர்,

காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒரளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதே உண்மை. இதற்கு 1989 தேர்தலை நீங்கள் கவனிக்க வேண்டும். தனித்து நின்று மூப்பனார் 20க்கும் மேற்பட்டதொகுதிகளைக் கைப்பற்றினார். ஆனால் அப்பொழுது தமிழகத்தில் நான்கு அணி போட்டியிட்டது. ஓட்டுகள் சிதறியதால் கருணாநிதி வெற்றி பெற்றார்.

ஆனாலும் காங்கிரசுக்கு அடி மட்ட தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஓரளவுக்கு ஓட்டு வங்கியும் இருக்கிறது. அந்த ஓட்டு வங்கியை தக்க வைக்கும் முயற்சியிலோ, அதிகரிக்கும் முயற்சியிலோ இது வரை காங்கிரஸ் இறங்கவே இல்லை. இது குறித்து கடந்த வாரம் இந்து நாளிதழில் ஒரு செய்தியும் வந்தது.

வீரவன்னியன் said...

பா.ம.க - விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களுக்கு இடையே அடி மட்டத்தில் சில கசப்புகள் இருக்கும் என்ற எண்ணம் உண்மை. கடந்த கால நிகழ்வுகள் அத்தகையது தான். அது தற்பொழுது மாறி வருகிறது. ஆனால் இன்னும் அதிக மாற்றம் தேவை. அது வருங்கால நிகழ்வுகளை பொறுத்தே இருக்கிறது.

உங்கள் அனைவரின் கருத்துக்கும் என் நன்றி.

மேலே ஒரு நண்பர் ஏதேதோ உளறி இருக்கிறார். என் பதிவுக்கு வந்து, நேரம் செலவழித்து உளறி விட்டு போனதற்க்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.

நண்பரே அவ்வப்பொழுது வந்து உளறுங்கள். உங்கள் வயிற்றெறிச்சல் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது

ஜோ/Joe said...

பா.மா.க கட்சிக்கு தமிழகம் முழுவதும் சீரான் ஓட்டு வங்கி கிடையாது..எங்கள் ஊரில்(குமரி மாவட்டம்) பா.ம.க என்றால் கிலோ என்ன விலை என்று மக்கள் கேட்கக்கூடிய நிலையில் தான் அதற்கு செல்வாக்கு உண்டு..அவர்கள் செல்வாக்குள்ள தொகுதிகளில் தி.மு.க அல்லது அ.தி.மு.க வோட்டையும் சேர்த்து வாங்கி ஜெயித்து விடுகிறார்கள்..அதே நேரம் தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் பா.மா.கா வால் கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பலன் இல்லை..இந்த கோணத்தில் பார்க்கும் போது ம.தி.மு.க தமிழகம் முழுவதும் குறைந்த அளவென்றாலும் சீரான் ஓட்டு வங்கியை கொண்டுள்ளது ..பின்னர் ஏன் பா.ம.கா வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவேயில்லை..தி.மு.க மற்றும் அ.தி.மு.க இருவரும் ஒரே நேரத்தில் கழற்றி விட மாட்டார்கள் (விட்டால் எதிரணி பலம் பெற்று விடுமே என்ற அச்சம்) என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையே பா.ம.க -வின் பலம்

ஜோ/Joe said...

//தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு திமுக வை விட பலம் அதிகம்.//
எனக்கு தெரிந்த வரையில் குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க வை விட காங்கிரஸ்,தி.மு.க,ப.ஜா.கா -வுக்கு ஓட்டு வங்கி அதிகம். இன்னும் சொல்லப்போனால் ம.தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு..

ஜெ. ராம்கி said...

'வீர' வன்னியன்,

நான் உளறுவது நீங்க சொல்லித்தான் மத்தவங்களுக்கு தெரியும்ங்கிறது இல்லை. எல்லோருக்கும் நல்லாவே தெரியும்!

நன்றி சொன்னதற்கு நன்றி. உங்களை மாதிரி ஒரு பச்சைத் தமிழன் நன்றி தெரிவிப்பதில் ஆச்சயர்மில்லைதான். ஓரே ஒரு டவுட். மேலே பத்தி எரியுதே அதுக்கு என்ன அர்த்தம்?!

பை த பை இன்னொரு தமிழ்குடிமகனாகிக் கொண்டிருக்கும் மாலடிமையின் மனசு உங்களது தமிழை பார்த்தா கஷ்டப்பபடும். அது வயிற்றெறிச்சல் இல்லீங்க.. வயிற்றெரிச்சல்!

'வீர' வன்னியனை தொடர்ந்து 'வீர' தேவன், பார்ப்பான், கவுண்டன், செட்டி, நாயுடு என அனைவரது பதிவுகளையும் ஆவலுடன் எதிர்நோக்கும், ஒரு சாதாரண சில்லுண்டி.

வீரவன்னியன் said...

நீங்க சொன்னத நீங்களே உளறல்ன்னு ஒத்துக்கிட்டத்துக்கு நன்றிங்க...

------மேலே பத்தி எரியுதே அதுக்கு என்ன அர்த்தம்?!

என் பதிவை படிக்கறப்ப உங்க வயிற்றுக்குள்ள எரியுது பாருங்க, அதைத் தான் காட்டியிருக்கேன்

அப்புறங்க...கண்ட கிறுக்கனுக்கெல்லாம் பதிவு வச்சிருக்கறவரு, தன் பெயர் கூட யாரோ கிறுக்கன் பெயரை ஒட்டியிருக்கறவரு எல்லாம் சாதிப் பதிவைப் பற்றி பேசக் கூடாதுங்க..

வேற யாராச்சம் பேசட்டும் நான் பதில் சொல்றேன்

நீங்க...சினிமாவுக்கு போங்க..பன்ச் டயலாக் வர்றப்ப விசில் அடிங்க..கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணுங்க...ஜாலியா இருங்க....

Dont become serious brother...what you are going to do by becoming serious...

At least can you capture a single councillor seat...

ஜெ. ராம்கி said...
This comment has been removed by a blog administrator.
ஜெ. ராம்கி said...

நன்றி. மரம் வெட்டி புத்தி அப்படியே இருக்கிறதுதான் ஆச்சர்யம். ஏதாவது பதவியை புடிச்சே ஆகணுங்களா அண்ணா?!

Anonymous said...

Dear "Kiruku" Ramki,

Defeat will enlighten the vision. That has excatly happened for you.

Keep it up

I hope you will also escape to Himalayas and take sanyasa

Jai Sri Ram

- VeeraVanniyan

ஜெ. ராம்கி said...
This comment has been removed by a blog administrator.