Sunday, September 17, 2006

ஒருவர்தான் பெரியார் - அவர் போல் பிறர் யார் ?

பெரியார் குறித்த கவிஞர் காசி ஆனந்தன் கவிதை

பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்


பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!


நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!


கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!


காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!


வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

Image Hosted by ImageShack.us

3 comments:

Sivabalan said...

கவிதை நல்லாயிருக்கு..

இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி

thiru said...

வீரவன்னியன்

நல்ல கவிதை! அதுவும் இனமான உணர்வுள்ள கவி வேங்கையின் கவிதை வரிகளின் நெருப்பு! நன்றிகள் பல இந்த பதிவிற்கு.

thiru said...

பெரியார் பற்றிய செய்திகள், சிந்தனைகளை திரட்ட ஒரு வலைப்பூ இங்கே http://periyaarr.blogspot.com/