Sunday, November 06, 2005

சந்திரிகாவும், ரத்த வெறியாட்டமும்

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் அரசியல் வாழ்க்கையின் இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிப்பது இலங்கையில் இருப்பவர்களுக்கு கவலை அளித்ததாக தெரியவில்லை. ஆனால் நம்முடைய இந்து பத்திரிக்கைக்கு அது ஒரு கவலைக்குரிய விடயமாக தெரிகிறது. ஏனெனில் இந்துவின் நடுப்பக்க கட்டுரைகளில் அதிகமாக பாசமூட்டி, தடவிக்கொடுக்கப்பட்ட ஒரே தலைவர் சந்திரிகா அவர்கள் தான். உலகின் வேறு எந்த தலைவருக்கும், ஏன் இந்திய தலைவர்களுக்கு கூட கொடுக்காத மரியாதையை இந்து சந்திரிகாவிற்கு வழங்க தவறியதில்லை.

சந்திரிகா மறுபடியும் முக்கியத்துவம் பெற என்ன வழிகள் இருக்கிறது என்பது குறித்து இந்துவின் நிருபமா அவர்கள் இன்றைய நடுப்பக்கத்தில் ஆராய்ச்சி செய்திருந்தார். படிக்க சுவையாக இருந்தது.

ஜெ.வி.பி போன்ற இனவாத சிங்கள வெறி குழுக்களை Radical அமைப்புகள் என்று மிருதுவாக வர்ணிக்கும் இந்து, புலிகள் என்றால் Chauvinist, bigot, racist போன்ற பதங்களை கையாளும்.

இதைத் தான் நடுநிலை நாளேடு என்று தோழர் ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற அறிவுஞீவிகள் போற்றுகிறார்கள்

தான் ஜனாதிபதியாக இருந்த காலக்கட்ட நினைவுகளை கடந்த வாரம் வெளியிட்ட சந்திரிகா, தன்னுடைய ஜனாதிபதி காலத்தில் அதிகமான போர்களை நடந்த வில்லை என்று கூறியிருக்கிறார் - I have not stained my hands with mud or blood

இது எவ்வளவு பெரிய பொய். இலங்கையில் ரத்த வெறியாட்டம் நடந்த முக்கியமான காலக்கட்டத்தில் சந்திரிகா தானே ஆட்சி செய்தார். இந்த ரத்த வெறியாட்டத்திற்கு சந்திரிகா தானே முக்கியமான காரணகர்த்தா. யாழ்ப்பாண தாக்குதல் யார் தலைமையில் நடந்தது ? பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக இடமாறிய காலத்தில் யார் ஆட்சி செய்தது ?

பிரஞ்ச் புரட்சியின் பொழுது "பிரட் கிடைக்கவில்லையா கேக் சாப்பிடுங்கள்" என்றானாம். தமிழ் பூமியில் ரத்த வெறியாட்டம் ஆடிய சந்திரிகா, என் ஆட்சியில் ரத்தக்கறை படியவில்லை என்று சொல்வதும் அது போல தான் உள்ளது.

நான் ஈழப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவன் இல்லை. அவர்களின் உண்மையான சோகம் புரியாது. ஆனால் ஈழ நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில் சந்திரிகாவின் பேச்சு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாக நினைக்கிறேன். என் கண்டனத்தைக் கூறவே இந்தப் பதிவு

5 comments:

Thangamani said...

இந்துவின் சுட்டியையும் இணைத்திருக்கலாம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

மேற்கண்ட என் பின்னூட்டத்தில் என் வார்த்தை தெரிவுகள் சரியில்லாததால் அழித்துவிட்டேன்., முதன்முதலில் நான் எழுதி அழித்த பின்னூட்டம் இதுதான்.

சந்திரிக்கா.... இப்படி முழுப் பூசணியை இந்துவில் மறைக்கலாமா?

Anonymous said...

பொய்களின் முரண்பாடுகளின் மொத்த வடிவமே சந்திரிகாதானே.சந்திரிகாவின்
காலத்தில் தான் வரலாற்றின் பெரிய சமர்கள் நடந்தன.மக்கள் அகதியாக
இடம் பெயர்ந்தனர்.பொய் சொல்வதில்
சந்திரிகாவுக்கு சளைத்தல்ல இந்துவும்.

Sri Rangan said...

சந்திரிகா குறித்த மிதிப்பீட்டை முன்வைப்பதற்கு முன்,நாம் வர்க்க அரசியலில் ஆளும் வர்க்கத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் பூர்ச்சுவா அரசின் தலைமைபற்றிய மதிப்பீட்டை முன் வைக்கணும்.அந்த அரசில் தலைமைக்கு எவர் வந்தாலும் அவர் அந்த வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய வியூகத்தோடு காரியமாற்றுவார்.இங்கு சந்திரிகாவுக்குப்பதில் இன்னொருவர் இருந்தாலும் அவரும் இதையே செய்வார்கள்.எனவே தனிநபரைக் குறித்த பார்வையை வைக்காது அவர் அங்கமுற்ற பூர்ச்சுவா அரசை,அது காத்துவரும் வர்க்க நலனை அம்பலப்படுத்தணும்.இங்கே குருதியில் நீந்தும் அந்த வர்க்கத்திடம் இன நலனோ அன்றி மொழிவாரி நலன்களோ முக்கியமல்ல.மாறாக அவர்களது உடமையின் நலன்களே முக்கியம் பெறும்.இந்நோக்கில் சந்திரிகா மட்டுமல்ல எந்தவொரு மனிதர் வந்தாலும் அவர் இதைத்தாம் செய்வார்.இதை எமது கடந்தகாலம் நிரூபித்தே வருகிறது.எனவே தலைவர்களைக் கொல்லுவதால் பூர்ச்சுவா நலன்களையும்,ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தையும் ஒழித்துவிட முடியாது.அந்த வர்க்கம் இன்னொரு தலைவர்மூலம் இதைச் செய்தே முடிக்கும்.இதற்கு இந்தியாவே நல்ல உதாரணம்.சந்திரிகாவும் பாசிஸ்ட்தாம் அதுபோல அனைத்து தமிழ்த் தலைமைகளும் பாசிச வாதிகள்தாம்.ஏனெனில் இந்த இருசாரார் நலனும் ஒன்றுதாம்.